• March
    30
    Monday

Main Area

Main



இனி இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது – விபரம் உள்ளே!

whatsapp
whatsapp

டெல்லி: மிகவும் பழைய இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழைய இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலிக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவு இன்று முதல் (பிப்.1-ஆம் தேதி) நிறுத்தப்படுகிறது. அதாவது ஆண்ட்ராய்டு 2.3.7 அல்லது அதற்கு குறைவான வெர்ஷன் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு குறைவான வெர்ஷன் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

ttn

ஆனால் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட மொபைல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதேபோல கைஓ.எஸ் 2.5.1+ (KaiOS 2.5.1+) இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஏற்கனவே கடந்தாண்டு இறுதியோடு விண்டோஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தி விட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.