• February
    22
    Saturday

Main Area

Main



புத்தாண்டில் புதிய சாதனைப் படைத்த வாட்ஸ் அப்! 

new year whatsapp
new year whatsapp

வாட்ஸ் அப்பில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேற்பட்டோர் புத்தாண்டு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது. வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது.

வாட்ஸ் அப்

இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதியில் இருந்து புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு வரை அதாவது 24 மணி நேரத்தில், உலகளவில் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான Happy New Year என்ற மெசேஜ்கள் வாட்ஸ் அப் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 200 கோடிக்கும் அதிகமான படங்கள் புத்தாண்டு இரவு அன்று பகிரப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில், ஒரே நாளில் இத்தனை ஆயிரம் மெசேஜ்கள் பகிரப்பட்டது இதுவே முதல்முறையாகும்.  இந்தியர்கள் மட்டும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மெசேஜ்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.