• August
    21
    Wednesday

Main Area

Main



சுத்தமாய் கைகழுவிய பாஜக... மொத்தமாய் தவிக்க விடும் அதிமுக... கமலால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
Loading...

பழையதோ, புதியதோ... ஓடுகிற குதிரைக்கு தான் மவுசு அதிகம் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக தற்போது தேமுதிகவை கழற்றி விடும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Premalatha

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பதில் இழுபறியையை ஏற்படுத்தியபோதே அதிமுகவுக்கு தேமுதிக மீது செம்ம காண்டு. பாஜக விரும்பியதால் வேண்டா வெறுப்பாக கூட்டணியில் சேர்த்துக் கொண்டது அதிமுக. அடுத்து தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாமல் வாக்கு வங்கி கடுமையாக சரிந்தது. அதுமட்டுமா கட்சிக்கான அங்கீகாரத்தியும் தேமுதிக இழந்தது.  இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் தேமுதிக மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. Kamal hassan

இந்நிலையில் தான்  முற்பட்ட சமுதாய மக்களுக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குறது தொடர்பாக தலைமை செயலகத்தில்  நடந்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் நீதி மையம் கட்சிக்கும் அழைப்பு விடுத்து அதன் தலைவர், கமலும் கலந்து கொண்டார். கமலின் மக்கள் நீதி மைய்யம் தேமுதிக வாக்கு சதவிகிதத்தை விட அதிகம். இப்போது  அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவால்  பெரிய லாபம் இல்லை. அதனால், அந்தக் கட்சிக்கு பதிலாக மக்கள் நீதி மையம் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என அதிமுக மேலிடம் விரும்புகிறது. 


இதனை அறிந்த பிரேமலதா அதிமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இருக்காதா பின்னே...  கட்சி தேய்ந்து கட்டெறும்பான பிறகு இனி திமுகவும், அதிமுகவும் தேமுதிக பக்கம் தலைவைத்தே படுக்காது. பாஜகவும் தேமுதிகவை ஒரேயடியாய் கைகழுவி விட்டது. இதனால், வேறு வழியே இன்றி, இன்று தாமாக முன் வந்து, உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனக் கூறி முந்திக் கொண்டார் பிரேமலதா.  vijayakanth

மக்களவை தேர்தல் கூட்டணிக்கு வழிய பல கட்சிகள் சென்றும் அலைக்கழிக்க விட்ட பிரேமலதாவா இப்படி தானாக முன் வந்து கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார் என திக்குமுக்காடி போய் கிடக்கிறார்கள் விவரம் அறியாத தேமுதிக கடைக்கோடி தொண்டர்கள். வாழ்க்கை ஒரு வட்டம்டானு விஜய் பேசிய டயலாக் இப்போது விஜயகாந்த் கட்சிக்கு எப்படி பொறுந்தி போய் விட்டது பார்த்தீர்களா?  

2018 TopTamilNews. All rights reserved.