• August
    20
    Tuesday

Main Area

Mainஜில் ஜில் ஜிகர்தண்டாவை தினமும் சாப்பிட்டு வந்தா என்னென்ன அற்புதங்கள் உடலுக்குள் நடக்கிறது தெரியுமா?

jigarthanda
jigarthanda
Loading...

கடல் உணவுகள், தமிழகத்தின் கடற்கரையோர மக்களின் அன்றாட உணவாகவும், பிற பகுதி மக்களின் தேவைக்கேற்ற உணவாகவும் திகழ்கிறது. கடல் உணவுகள் என்றால் கடல் சார்ந்த அசைவ உணவுகள் மட்டுமல்லாமல், கடலில் இருந்து கிடைக்கும் சைவ உணவும் சேர்த்துதான். அந்த வகையில் கடலன்னை நமக்கு அளிக்கும் அமிர்தம்தான், சுருள்பாசி அல்லது கடல்பாசி என்றழைக்கப்படும் ஸ்பைரூலினா.

தினமும் ஸ்பைரூலினா சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் !

பாசி வகைகளில் உலகெங்கும் ஆயிரக்கணக்கானவை இருந்தாலும், ஸ்பைரூலினா எனும் நீலப்பச்சைப்பாசி அதில் சிறப்பான ஒன்று. ஸ்பைரூலினாவைப் பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், உலகில் உயிரினங்கள் தோன்றக் காரணமான, முதல் வடிவம்தான் அது. வியப்பாக இருந்தாலும் அதுவே உண்மை.

கடற்பாசி என்றும் அழைக்கப்படும், உலகின் மிகப்பழமையான பாக்டீரியாவான ஸ்பைரூலினா, இதன் உயிராற்றல் சத்துக்கள் காரணமாக, ஒரு கிலோ ஸ்பைரூலினா ஆயிரம் கிலோ காய்கறிகளுக்கு சமம் என அறியப்படுகிறது. உலகில் வேறு எந்த ஒரு தாவரங்களிலும் இல்லாத உயிர்காக்கும் சத்துக்கள், ஸ்பைரூலினாவில் மட்டுமே இருக்கின்றன.

ஸ்பைரூலினாவில் இருக்கும் காமாலினோலெனிக் அமிலம், உலகில் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த ஒரு உயிரினத்திலும் இல்லை, இந்த அமிலம்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலை வலுவாக்குகிறது. மற்ற எந்த உணவையும் விட, மிக அதிக அளவில் சீரணமாகும் தன்மையுள்ள புரதச்சத்துக்கள் நிரம்பி உள்ளது

ஆப்பிரிக்காவின் பஞ்ச காலங்களில் மக்கள் எல்லாம் உணவின்றி எலும்பும் தோலுமாக இருந்த சமயத்தில், ஆப்பிரிக்காவின் தீவான மடகாஸ்கர் நாட்டின் மக்கள் மட்டும் பஞ்சத்தால் உணவின்றி, வெறும் தண்ணீரை மட்டும் குடித்து வந்தாலும், அவர்கள் எந்தவித உடல் பாதிப்புமின்றி நலமுடன் இருப்பதை கண்டு வியந்த ஆய்வாளர்கள் அவர்கள் குடித்த நீரைப்பரிசோதித்தபோது, அதில் கடல்பாசியின் தன்மை அதிகம் இருப்பதைக்கண்டறிந்தார்கள்.

இதுபோல, கடுமையான வியாதிகளின் பாதிப்புள்ள ஒரு சிலருக்கு ஸ்பைரூலினா கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வேறு மருந்துகள் கொடுத்தபோது, ஸ்பைருலினா சாப்பிட்டவர்கள் உடல்நிலை, மற்ற மருந்துகளை சாப்பிட்டவர்களைவிட, விரைவில் சீரடைந்தது.

ஸ்பைரூலினாவில் உள்ள சத்துக்கள்!
கடலில் இயற்கையாக விளையும் ஸ்பைரூலினாவை மீனவர்கள் அதிக அளவில் சேகரித்து, பதப்படுத்தி விற்கின்றனர் மற்றும் சிலர் செயற்கையாகவும் நீரில் வளர்கின்றனர். இனி கடல்பாசியில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாமா?

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் தரும் இரும்பு, கால்சியம், துத்தநாகம், செலினியம் உள்ளிட்ட தாதுக்கள், வைட்டமின்கள், என்சைம்கள், பீட்டா கரோட்டின் மற்றும் சில கூட்டுப்பொருட்கள் எல்லாம் ஸ்பைரூலினாவில் நிறைந்திருக்கின்றன, எந்த அளவில் என்றால், 70 முதல் 80 சதவீதம் வரை.

ஸ்பைரூலினாவில் உள்ள சத்துக்கள் எல்லாம் தற்போது மேலைமருந்துகளில் செயற்கையாக தனித்தனியே தயாரிக்கப்பட்டாலும், இயற்கையிலேயே அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரே தாவரம் ஸ்பைரூலினாதான். ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் உலகில் வைட்டமின் பி 12 உள்ள ஒரே சைவ உணவு, இதுவேயாகும்.

ஸ்பைரூலினாவின் பயன்கள்

 

spirulla


உடலுக்கு ஊட்டம் மற்றும் இரத்தகுறைபாடு போக்கும் வைட்டமின்கள் உடலில் முழு அளவில் செயலாற்ற தாதுச்சத்துகள் அதிகம் தேவை. அத்தகைய தாதுக்கள் நிறைந்திருப்பதால், கைகால்மூட்டு வலிகளைப்போக்கும்.

ஸ்பைரூலினாவில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையை நீக்கி, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

உடலுக்கு முழு அளவிலான நோய் எதிர்ப்புசக்தியை உண்டாக்கும் ஆற்றல்மிக்கது. பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளை சரிசெய்யும், பேறுகால சமயத்தில் ஊட்டச்சத்துக்காக பெண்கள் அவசியம் கடல்பாசிஉணவை உட்கொண்டுவரவேண்டும். தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தம் தன்மைமிக்கது.

பலவித நோய்கள் தடுக்கப்படும் :
ஸ்பைருலினாவில் உள்ள துத்தநாகச்சத்தானது, முடி உதிர்தலைத்தடுக்கும் தன்மையுடையது.

மனக்கவலைகள் மற்றும் மனஇறுக்கம் காரணமாக, உடல் சுரப்பிகளின் செயல்தடுமாற்றம்தான் வியாதிகள், மேலும் நமக்கு நன்மை தராத எண்ணங்கள்தான் வியாதிகள் அணுகுவதற்கு முதல் காரணம் எனும் உண்மை உணர்ந்து, எண்ணங்களை சீராக்கவேண்டும், அல்லது கடல் பாசி சாப்பிட, நலமாகும்.

ஸ்பைரூலினா எந்த ஒரு பக்க விளைவுகளும், அலர்ஜியும் இல்லாத இயற்கை உணவு.

ஸ்பைருலினாவில் உள்ள பீட்டா கரோட்டின், கேரட்டில் உள்ளதைவிட 15 மடங்கு அதிகமானது. வியாதி பாதிப்பை சரியாக்கி, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கும் வல்லமைபெற்றது.

என்றும் 16 :
உடலுக்கு நன்மைகள் தரும் ஸ்பைரூலினாவை கண்களின் கருவளையங்களை நீக்கவும், முகப்பருவை நீக்கி முகத்தை பொலிவாக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்பைரூலினாவில் உள்ள சில வேதிப்பொருட்கள் சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு நலம் புரியும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்தும் ஆற்றல்மிக்க பச்சையங்கள் இதில் அதிகம் உள்ளன.

ஸ்பைரூலினாவில் உள்ள சில என்சைம்கள் உடலில் வயதாகும் தன்மையைக் குறைத்து, வியாதிகள் போக்கும் தன்மைகள் கொண்டு, உடல் செல்களை ஆற்றல்மிக்கதாக மாற்றி,தோல் சுருக்கங்களை போக்கி, உடலை இளமையாக்குகிறது.

பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள் போன்றவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைவிட, அதிக அளவு நன்மை செய்யும் ஆற்றல்மிக்கது ஸ்பைரூலினா.

இன்றைக்கு மோசமான வியாதிகள் என்று மேலை மருத்துவம் கூறும் அத்தனையையும் சரிசெய்து, மனிதனின் உடல் நலத்தை சீராக்கும்.

ஞாபக சக்தியை அதிகரித்து, உடலின் ஐம்பொறிகளையும் சிறப்பாக இயங்கவைக்கும் இயல்புடையது.

மொத்தத்தில் அமிலத்தன்மைகொண்ட வலுவற்ற உடலை, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க வலுவான உடலாக மாற்றுகிறது, ஸ்பைரூலினா.

யாரெல்லாம் ஸ்பைருலினா சாப்பிடலாம்?
ஸ்பைரூலினாவில் உள்ள அதிகபட்ச செரிக்கும் தன்மைகளுடைய புரதத்தால், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறுவர்கள் முதல் தாய்மார்கள் வரை, உடல் உழைப்பாளர்கள் முதல் மன உழைப்பாளர்கள் வரை, பாமரன் முதல் மேதைகள் வரை, எல்லோரும் உபயோகிக்கலாம், ஸ்பைருலினா அடைத்த கேப்ஸ்யூல்களையே, விண்வெளி வீரர்கள் உணவாக பயன்படுத்துகின்றனர்.

உலகினில் தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில், அனைத்து சத்துகளும் கொண்டுள்ள ஸ்பைருலினா, பசும்பாலைவிட, நான்கு மடங்கு கூடுதல் சத்து மிக்கது.

இத்தகைய நலம்தரும் தன்மைகளாலேயே, ஐக்கிய நாடுகள் சபை ஸ்பைருலினாவை முழு ஊட்டச்சத்துள்ள உணவாக, அங்கீகரித்திருக்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட் எனப்படும் காப்புணவான ஸ்பைருலினா, நமது உடலை முப்படைகள் கொண்ட உலகின் அதி நவீன ராணுவம் எப்படி தனது நாட்டை, கண்களைக்காக்கும் கண்ணிமைகள் போல காக்கிறதோ, அதுபோல நமது உடலை வியாதிகளிலிருந்து காக்கிறது என்றால், அது மிகையில்லை.

ஜில் ஜில் ஜிகர்தண்டா:
கடல்பாசியிலிருந்து இனிப்பு கலந்த உணவுகள் பிரசித்தம் என்றாலும் அனைத்துவகை உணவுகளும் செய்யலாம். முதலில், கடல் பாசி ட்ரிங்க் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கேட்கவே, நாவூறும் மதுரையின் அடையாளமான ஜிகர்தண்டாவின் முக்கிய பொருளே, ஸ்பைரூலினா தான்.

கடல்பாசி, இனிப்பு கலந்த பால், நன்னாரி சர்பத் மற்றும் ஐஸ்க்ரீம் இவைகளின் சுவைமிகு கலவையே, ஜிகர்தண்டா. சத்து மிக்க பானம்.

கடல் பாசியை பொடியாக்கி, எலுமிச்சை நீரில் கலந்து, புத்துணர்வு பானமாகப் பருகிவரலாம்.

2018 TopTamilNews. All rights reserved.