• October
    20
    Sunday

Main Area

Main



குழந்தைகளின் சந்தோஷமான எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும்.... உலக இசை தினம்  (ஜூன் 21)

உலக இசை தினம்
உலக இசை தினம்

உலகெங்கிலும் பலதரப்பட்ட மொழிகள் இருப்பினும், அனைவரையும் இணைக்கும்  சக்தி இசைக்கு இருப்பதால் தான் இசையை ’உலக மொழி’ என்கிறோம். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஈர்க்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. 

music

உலம் முழுவதும் உள்ள அனைத்து இசையமைப்பாளர்களும் 1982ம் வருடம் ஜூன் 21ம் நாள் பிரான்சில் ஒன்று கூடினார்கள். இசைக் கலைஞர்கள் ஒன்று கூடிய நாளையே உலக இசை நாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இசை என்பது முறைப்படுத்தப்பட்ட நேர்த்தியான ஒலி வடிவம். ஒவ்வொரு குழந்தையும் தாயின் கர்ப்பகாலத்திலேயே இசையை ரசிக்கத்தொடங்கி விடுகிறது. இசையே மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் இனிமையானதாகவும், சுவையானதாகவும் வைத்திருக்கிறது. 
பறவையின்  கீறீச்சல்கள், விலங்குகளின் கர்ஜனைகளில் தொடங்கி  இன்று டிஜிட்டல் வரை வளர்ந்திருந்தாலும் நாட்டுப் புறப்பாட்டு,  குத்துப்பாட்டு, மேற்கத்திய இசை , சிம்பொனி என்ற பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டாலும் இசைக்குரிய தனித்தன்மையும் பெருமையும் குறையவே இல்லை. 

music

கருவில் தொடங்கி தாலாட்டு முதல் ஓப்பாரி வரை இசையே மனிதனை அடுத்த நகர்வுகளுக்கு நடத்திச் செல்கிறது.  சுப நிகழ்வுகளிலும், பள்ளி கல்லூரி முதல் அரசு விழாக்கள் வரை ஆரம்பமும், முடிவும் இசையாலேயே நடத்தப்படுகிறது.  நமது சமூகம் இசையால் கட்டுண்டது. 
பல்லாயிரக்கணக்கான மக்களை தங்களின் திறமையான இசையால் வசீகரிக்கும் இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்களுக்கும் நன்றியுடன் மரியாதை செலுத்தி இந்த இசை நாளை நாமும் கொண்டாடலாம்.

music

வெறும் கொண்டாட்டத்தோடு நின்று விடாமல், எப்பொழுதும் படிப்பு, ட்யூசன், மொபைல் போன், தொலைக்காட்சி என்று இருக்கும் குழந்தைகளை சிறு வயதிலேயே ஏதாவது இரு இசை கருவியை வாசிக்கப் பழக்கப்படுத்துங்கள். இசை மன அழுத்தத்தை குறைக்கிறது. தனிமையை விரட்டியடிக்கிறது. கூட்டுக் குடும்பங்களை எல்லாம் சிதைத்து விட்ட இந்த இயந்திர உலகில், உங்கள் குழந்தைகளின் மன நலத்திற்கும், உடல் நலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கப் போவது, அவர்களை இசைக் கருவிகளோட பழக விடுவதாக தான் இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.