• February
    28
    Friday

Main Area

Main



பாமகவுக்கு ஆப்பு... வன்னியர்களை வளைத்து வளைத்து தூக்கும் திமுக..!

அன்புமணி
அன்புமணி

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது பாமக. ஆனால் அதே நேரத்தில் அப்போது நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாமகவின் மக்கள் பெரிதும் உதவியது.

 மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக அதிமுக விமர்சன விமர்சிப்பதை விட அதன் கூட்டணி கட்சியான பாமகவை வழக்கத்தைவிட அதிகமாக வசித்து வந்தது குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் பாமகவை கடுமையான முறையில் விமர்சனம் செய்தனர். 

Ramadoss

அதேபோல விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவை தோல்விக்கு செய்ததில் பாமக பெரும் பங்கு வகித்தது தங்கள் வசம் இருந்த இரண்டு தொகுதிகளையும் திமுக, அதிமுகவிடம் பறிகொடுத்தது. மேலும் முரசொலி அலுவலகம் தொடர்பான மூல பத்திர விவகாரத்தை கிளப்பி விட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியை நீதிமன்றம் வரை இழுத்துச் சென்றுவிட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பாமகவின் வாக்கு வங்கியை குறிவைத்து திமுகவினர் செயல்பட ஆரம்பித்தனர். 

அந்த வகையில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் குறிப்பாக வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் மேட்டூர் எடப்பாடி போன்ற தொகுதிகளில் திமுகவை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அதிமுக மற்றும் பாமகவில் உள்ள வன்னியர்களை குறிப்பிட்டு பேசிவருகிறார். ஏற்கனவே இவர் வீரவன்னியர் பேரவை மற்றும் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் பதவி வகித்து வந்துள்ளார். 

anbumani

தேமுதிக சார்பாக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இவனை பயன்படுத்தி தன்னுடைய சமுதாயமான வன்னியர் சமுதாய மக்களை திமுகவிற்கு இருக்கும்படி ஆரம்பித்துள்ளார். சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பாமகவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில் இவரின் செயல்பாடுகள் பாமக தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே பாமக -அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பிடிக்காமல் இருக்கும் தொண்டர்களை வைத்து காய் நகர்த்தும் திமுகவின் இதுபோன்ற செயல்பாடுகள் பாமகவின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்குமா அல்லது பாமக தலைமை விழித்துக்கொள்ளுமா?

2018 TopTamilNews. All rights reserved.