darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



'சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது' : உச்ச நீதிமன்றம் கருத்தால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி!

சபரிமலை
சபரிமலை

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து  65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  கொண்ட அமர்வு,  இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற  பரிந்துரை செய்தது.

ttn

மேலும்  இதுகுறித்த விசாரணை நடந்து முடியும் வரை அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்ற நிலை தொடரும் என்று   உத்தரவிட்டது.இதையடுத்து சபரிமலைக்குக் கடந்த மாதம் சென்ற சமூக செயற்பாட்டாளர் பிந்து மீது  மிளகாய் பொடி ஸ்பிரே அடித்துத் தாக்கினர். இதைத் தொடர்ந்து பிந்து, ரெஹானா பாத்திமா உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில், சபரிமலைக்கு  வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி  வழக்கு தொடர்ந்தார்.

ttn

இதை விசாரித்த நீதிபதிகள், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்தாண்டு நாங்கள் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல. இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

ttn

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது. அணைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு தர முடியாது. அதே சமயத்தில் கோயிலுக்குள் போலீசார் நிற்க வைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கை தொடர்ந்த  பெண்கள் மூவருக்கும் ஏற்கனவே பாதுகாப்பு உத்தரவு உள்ளது. சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும்' என்றனர். 


 

2018 TopTamilNews. All rights reserved.