• April
    02
    Thursday

Main Area

Main



இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தலைவணங்க வேண்டும்: பிரதமர் மோடி

pmmodi
pmmodi

டெல்லி: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தலைவணங்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கவுள்ளார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலை போற்றும் வகையில், "ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டுக்கு அயராது உழைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தலைவணங்க வேண்டும்"  என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.