darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



அசத்தலான வசதிகளுடன் விவோ வி15 - முன்பதிவு இன்று துவங்குகிறது

VIVO V15
VIVO V15

செல்பி கேமராக்கள், ஆடியோ துல்லியம் என இந்திய வாடிக்கையாளர்களை ஈர்த்து தனக்கென தனி இடம் பிடித்து கைபேசி விற்பனையில் முன்னணி வகிக்கிறது விவோ நிறுவனம். தற்பொழுது விவோ சார்பில், விவோ வி15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசியச் சந்தைகளில் வெளியான இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

vivo v15
விவோ வி15 கைபேசியின் சிறப்பம்சங்கள் 
  • டூயல் நேனோ சிம் மற்றும் 6.53 முழு ஹெச்டி திரையை விவோ வி15 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
  •  பாதுகாப்பான கோர்னிங் கோரில்லா கிளாஸ் 5 திரையைப் பெற்றுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 ஃபன்டச் ஓஎஸ்-ஐ பெற்றுள்ளது. 
  • ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ பி70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகள் இருக்கின்றன. 
  • பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்ட இந்த விவோ வி15, 12/8/5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. 
  • முன் புறத்தில் செல்பிகளுக்காக 32 மெகா பிக்சல் பாப்-ஆப் கேமரா சென்சாரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 
  • ஃபிங்கர் பிரின்ட் சென்சாரைக் கொண்டுள்ளது.
  • விவோ வி15 கைபேசி 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. 
  • இது மட்டுமின்றி விவோ வி15 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி வசதியையும் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் விவோ வி15 ஸ்மார்ட்போன் மட்டுமே 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியைப் பெற்றுள்ளது.
  • vivo v15

     

விலை எவ்வளவு ?

இந்தியாவில் ரூ.23,990க்கு இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு ஃப்ரோசன் பிளாக், கிளாமர் ரெட் மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளன. 

இப்படி பல முன்னணி வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு  மார்ச் 25 ஆம் தேதி அதாவது இன்று முதல் முன்பதிவுக்கு வரவுள்ளதாகவும் ஏப்ரல் 1 முதல் விற்பனை துவங்கப்படும் எனவும் விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க : 

சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரெட்மி 7 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்: விலை விபரம் உள்ளே!


 

2018 TopTamilNews. All rights reserved.