kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


48 எம்.பி ரியர் கேமரா, 32 எம்.பி பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

vivo
vivo
Loading...

டெல்லி: விவோ நிறுவனத்தின் புதிய வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக 48 எம்.பி ரியர் கேமரா, 32 எம்.பி பாப்-அப் செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், டூயல் டர்போ கேமிங் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் உள்ள பாப்-அப் செல்ஃபி கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோப்பாஸ் புளு மற்றும் ரூபி ரெட் ஆகிய இருவிதமான நிறங்களில் கிடைக்கும் இதன் விலை ரூ.28,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 8-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வரிசையில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9, டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி + 5 எம்.பி + 8 எம்.பி டிரிபிள் ரியர் கேமரா செட்டப், எல்.இ.டி ஃபிளாஷ், 32 எம்.பி செல்ஃபி கேமரா, 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3700 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.