• February
    29
    Saturday

Main Area

Main



விவேக்கின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த ஷங்கர் 

விவேக்
விவேக்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் நடிகர் விவேக். எதார்த்தமான தனது நகைச்சுவை தன்மையோடு சமூகத்திற்குக் கருத்தும் சேர்த்துச் சொல்வதால் இவருக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் இதுவரை பல முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். ஆனால் தான் இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவே இல்லை என்று ஒரு முறை பேட்டியில் தெரிவித்தார். 

இந்த நிலையில் தற்போது அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. ஆம்... ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

indian 2

இந்தியன் 2 படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யூத் ஜாம்வால் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.  
 

2018 TopTamilNews. All rights reserved.