• February
    28
    Friday

Main Area

Main



“நியூசிலாந்து கிரிக்கெட்டர்கள் ரொம்ப நல்லவங்க!” – கேப்டன் விராட் கோலி புகழாரம்

kohli
kohli

ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தவறான சைகைகளை மைதானத்தில் காட்ட மாட்டார்கள் என கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது. கடந்தாண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. உலகக் கோப்பை அரையிறுதி போட்டி தோல்விக்கு பழி வாங்கும் விதத்தில் விளையாடுவீர்களா என்று ஊடகங்கள் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பின.

nz team

அதற்கு பதிலளித்த விராட் கோலி, “நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நல்லவர்கள். அதனால் அந்த அணியை பழி வாங்க வேண்டும் என்று விரும்பினால் கூட அவர்களுக்கு எதிரான எண்ணம் நமக்கு வராது. சிறந்த முறையில் மைதானத்தில் அவர்களை எதிர்த்து போட்டியிடுவோம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்று முன்னரே கூறியிருக்கிறேன்” என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.