darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



ஒரு நபரை நேசிப்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பது போன்றது! விராட் வெளியிட்ட புகைப்படம்!! 

விராட்கோலி
விராட்கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் 2வது திருமண நாளை கொண்டாடினர். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் இவர்கள், கடந்த 2017 அன்று இதே நாளில்தான் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இரண்டாம் ஆண்டு திருமண நாளை குறிக்கும் விதமாக விராட் கோலி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

virat

ஒரு நபரை நேசிப்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பது போன்றது என்று அனுஷ்கா சர்மா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும் காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அதற்கும் மேல என குறிப்பிட்டுள்ள கோலி, நீ என் வாழ்க்கையில் இருப்பதால், நான் என்னை அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். 

 

இதேபோல், அனுஷ்கா சர்மாவும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.