• October
    15
    Tuesday

Main Area

Main



ஓடணுமா? ஓட விடணுமா? மாஸ்ஸாக விஜய்சேதுபதியின் சிந்துபாத் டீஸர்!

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் டீஸர் வெளியானது.

சேதுபதி,பண்ணையாரும் பத்மினியும் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - அருண்குமார் மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் 'சிந்துபாத்'. இதில் 'இறைவி' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

sindubath

இந்நிலையில் தற்போது மிகுந்த ஏதிர்பார்ப்பு உள்ளாகிய இப்படத்தின் டீஸர் வெளியானது. இங்க எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னை வருவது சகஜம் தான் என்று விஜய் சேதுபதியின் வசனத்தில் தொடங்கி முடியும் டீசரில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒருசில காட்சிகளில் வருகிறார்.

ஆக்சன், துப்பாக்கி சத்தம் என ஒருபக்கம் இருக்க, யுவன்ஷங்கர் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசையில் படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.