• April
    02
    Thursday

Main Area

Main



`குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு நடனம் ஆடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள் : வைரல் வீடியோ!

 குட்டி ஸ்டோரி
குட்டி ஸ்டோரி


பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது. 

ttn

கோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின்   குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.  

ttn

அனிருத் இசையமைக்க அருண் ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார். இந்த பாடலை  யூட்யூபில்  1 கோடியே 53 லட்சம் பார்த்துள்ளனர், 1.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 

இந்நிலையில்  தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு மாணவர்கள் தாளம் போட்டு, பாட்டு பாடி நடனம் ஆடும் வீடியோ வைரலாகி உள்ளது. இதை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதேபோல்  குட்டி ஸ்டோரி பாடல்  ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.