• August
    21
    Wednesday

Main Area

Main



ரஷ்மிகா பிறந்தநாள்: விஜய் தேவரகொண்டா கொடுத்த பரிசு இது தான்!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
Loading...

சென்னை: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடித்துவரும் டியர் காம்ரேட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள் அப்படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்து வருகின்றனர். பரத் கம்மா இயக்கிவரும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

rashmika

இந்நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி(இன்று) ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸ் தரவிருப்பதாக நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துருந்தார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, மற்றவர்கள் நாளை தெரிந்து கொள்ளட்டும், தனக்கு மட்டும் அந்த சர்ப்ரைஸ் சொல்லுமாறு ராஷ்மிகா கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் இன்று இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள விஜய் தேவரகொண்டா, 'நாங்கள் சும்மா சொன்னோம். அப்சட் ஆகாத. படப்பிடிப்பு தளத்தில் நீ தான் எங்களது மகிழ்ச்சி. உனது நடிப்பின் மூலம் அழவும், மற்ற அனைத்து நேரங்களிலும் எங்களை சிரிக்க வைப்பவள் நீ. ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11.11 மணிக்கு வெளியாகும் முதல் பாடலை உனக்கு டெடிகேட் செய்கிறோம்' என்று பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: கங்கனா மாதிரி ஒருபோதும் நடிக்க முடியாது!நடிகை மஞ்சுமா மோகன் தடாலடி!

2018 TopTamilNews. All rights reserved.