• October
    16
    Wednesday

Main Area

Main



விஜய் தேவரகொண்டாவின் ஹாட் லிப்கிஸ்: வெளியானது டியர் காம்ரேட் டீசர்!

டியர் காம்ரேட்
டியர் காம்ரேட்

சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் டீசர் வெளியானது.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். 

rashmika

கடந்த ஆண்டு வெளியான டாக்ஸிவாலா படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துவருகிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் 1.30 நிமிடத்தில் அமைந்துள்ள இப்படத்தின் டீசரில் 30 வினாடிகள் ஆக்சன் காட்சிகளும் மீதி வினாடிகளில் முழுவதும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹாட் லிப்கிஸ் காட்சியும் உள்ளன.

 

2018 TopTamilNews. All rights reserved.