• August
    25
    Sunday

Main Area

Main



ஒரு கல்வித்தந்தையின் கைங்கர்யத்தால் அஜீத் சம்பளத்தை எட்டிப் பிடித்த விஜய்...எத்தனை கோடின்னு தெரிஞ்சுக்கணுமா?

விஜய்,அஜீத்
விஜய்,அஜீத்
Loading...

விஜய் தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தாலும் அஜீத் தொடர்ந்து மூன்று ஃப்ளாப் கொடுத்தாலும், கடந்த 10 வருடங்களாக முன்னவரை விட அதிக சம்பளம் வாங்குபவர் பின்னவர்தான்.காரணம்? வார்டன்னா அடிப்போம் கதைதான். யாரும் அலசி ஆராய்ந்ததில்லை.

vijay

தற்போது அந்த இழுக்கை இறுதி செய்யும் வகையில் கல்வித்தந்தை ஒருவருக்கு அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்து அஜீத்தின் சம்பளத்தை எட்டவிருக்கிறார் விஜய். அந்தத் தயாரிப்பாளர் வேறு யாருமல்ல. இறுதியாக ‘எல்.கே.ஜி’படத்தைத் தயாரித்த வேல்ஸ் கல்லூரிக் குழும கல்வித் தந்தை ஐசரி கணேஷ்தான்.

 

தளபதி 63’ படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு மாதகாலமே உள்ள நிலையில் தனது 64 வது படத்துக்கு இயக்குநரை வலைவீசித் தேடிவந்த விஜய் இறுதியில் ‘மாநகரம்’,’கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை முடிவு செய்தார். இதை ஒட்டியே அவரது தயாரிப்பாளர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

vijay 64

கடந்த சில மாதங்களாகவே தனக்கு ஒரு படம் பண்ணித்தரும்படி விஜயை விடாமல் சேஸ் செய்து வந்த ஐசரி கணேஷ், ‘ஜீ அவர் வாங்குற சம்பளத்தை அப்படியே உங்களுக்குத் தர்றேன்’ என்றவுடனே விஜய் கண்களில் பச்சை விளக்கு எரிந்ததாம்.

அவர் எவ்வளவு வாங்குறார், இவர் எவ்வளவுலர்ந்து அவ்வளவுக்குத் தாவுனார் என்று குழப்பமாக இருக்கிறதா? நேர்கொண்ட பார்வையில் 50 வாங்கிய அவர், அடுத்த படத்துக்கு உயர்ந்திருப்பது 60க்கு. இவர் கல்வித்தந்தையின் தயவால் 40 லிருந்து ஸ்ட்ரெயிட்டாக 60க்குப் போகிறார்.

2018 TopTamilNews. All rights reserved.