• August
    21
    Wednesday

Main Area

Main



டியர் காம்ரேட்: விஜய் தேவரகொண்டா பட பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய் தேவரகொண்டா-  விஜய் சேதுபதி
விஜய் தேவரகொண்டா- விஜய் சேதுபதி
Loading...

சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் 'காம்ரேட் ஆன்தம்' பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘டியர் காம்ரேட்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘காம்ரேட் ஆன்தம் ’ பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் பாடியுள்ளனர். அதில் மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் கீதா கோவிந்தம்’ திரைப்படத்திற்குப் பிறகு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.