darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



கோவிலில் குப்பை போடுவதற்காக வைத்திருந்த காங்காரு குப்பைத்தொட்டியை கடவுளென நினைத்து வழிபட்ட மக்கள்! 

Bihari
Bihari

பீகாரில் கங்காரு கல்லுக்கு பொட்டு வைத்து வழிபட்ட மக்களின் செயல் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Dustbin

பீகாரில் உள்ள கோவில் ஒன்றில் குப்பைகளை போடுவதற்காக கங்காரு வடிவிலான குப்பை தொட்டியை வைத்துள்ளனர்.. அதனை சாமி சிலை என நினைத்துக்கொண்ட பெண் பக்தர்கள் அதற்கு குங்கும பொட்டுவைத்து பூஜைகள் செய்து வழிபடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகியுள்ளது. அந்த வீடியோவில், மூன்று பெண்கள் ஒரு கங்காரு வடிவத்தில் இருக்கும் குப்பைத்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துபின் பொட்டு வைத்து வழிபடுகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்திய ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின்படி குப்பை தொட்டிகளையும் பீகார் மக்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதாக நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.  குப்பைத் தொட்டிக்கும் சிலைக்கும் கூட வேறுபாடு தெரியாத அடிப்படை அறிவு இல்லாத மக்கள் வாழும் மாநிலமாக பீகார் இருப்பது வேதனையாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.  
 

2018 TopTamilNews. All rights reserved.