மிலிட்டரி வீரரின் மிரட்டல் நடனம் -ட்விட்டரையே டான்ஸ் ஆட  வைத்த அட்டகாசமான ஆட்டம் .  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainமிலிட்டரி வீரரின் மிரட்டல் நடனம் -ட்விட்டரையே டான்ஸ் ஆட  வைத்த அட்டகாசமான ஆட்டம் . 

இராணுவ சிப்பாய்
இராணுவ சிப்பாய்

ஒரு ராணுவ வீரர் அற்புதமாக ஒரு சினிமா டான்சரையே மிஞ்சுமளவுக்கு நடனமாடும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது .இந்த  45 விநாடி வீடியோ  கிளிப் ட்விட்டரில் உமா ஆர்யா என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது, 

uri

விக்கி கவுசலின் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான யூரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திரைப்படத்தின் சல்லா பாடலுக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர்  நடனமாடுவதை வீடியோ  கிளிப் காட்டுகிறது.அதில்  முழு ஆற்றலுடன், யாரும் பார்க்காதது போல் அந்த ராணுவ வீரர் நடனமாடுகிறார்.

"வாட்ச்: இந்திய இராணுவ சிப்பாய் கார்கிலில்  நடனமாடுகிறார். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்" என்று உமா ஆர்யா பதிவின் தலைப்பில் கூறினார்.

சிப்பாய்  நடனமாடும் இந்த வீடியோ  ஏற்கனவே 35,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. பதிவின்  கருத்துகள் பிரிவில், நெட்டிசன்கள் ராணுவ சிப்பாயின் நடனத்தை பாராட்டினர் .

"இது இன்று நான் இணையத்தில் பார்க்கும் சிறந்த வீடியோவாக இது இருக்கும்" என்று சாய் என்ற பயனர் பாராட்டினார் .

2018 TopTamilNews. All rights reserved.