• November
    13
    Wednesday

Main Area

Main



என்னது சென்னையில குடிநீர் தட்டுப்பாடா? யாரோ வதந்திய கெளப்பிவிட்டுருக்காங்க; அதிமுக அமைச்சர் பேட்டி!

குடிநீர்
குடிநீர்

சென்னை: சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

water

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கி உள்ளது. பள்ளிகள். அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இதே பிரச்னை தான் பின் தொடர்கிறது. பெரும்பாலான ஐடி நிறுவனங்களில்  வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லும் அளவுக்கு நிலைமை வழக்கத்தை விட மோசமாகியுள்ளது. தண்ணீரால் சில இடங்களில் கொலை சம்பவமும் நடந்தேறியுள்ளது. இருப்பினும் சென்னை குடிநீர் வாரியம் தங்களால் இயன்ற அளவுக்குக் குடிநீரை வழங்கி வருகிறது.

velumani

இந்நிலையில்  இதுகுறித்து குடிநீர் தட்டுப்பாடு குறித்துப் பேசியுள்ள அமைச்சர் வேலுமணி ,'ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைக்கப் பாக்குமட்டை தட்டுகளைப் பயன்படுத்த கூறியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன. சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இது உண்மையில்லை. மழை பெய்யாதது இயற்கையானது. எதிர்கட்சிகளை விட நாங்கள் சிறப்பாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைக்கு வழங்கவுள்ளோம்' என்று அறிவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.