• August
    26
    Monday

Main Area

Main



வெள்ளை யானை பராக் பராக்

Fields
Fields
Loading...

அரிசி, பருப்புவகைகளை படைக்கும் விவசாயிக்கு, அதன்மீது விலைவைக்கும் உரிமையில்லை. ஆனால் அதுவே பிரியாணியாக கடையில் வரும்போது, விவசாயிக்கு விதிக்கப்பட்ட விலையைவிட பலமடங்கு கூடுதலாக அவனிடமே ஜிஎஸ்டியோடு பில் கேட்கிறது சந்தை. சரி, உற்பத்தி செய்த பொருளுக்குத்தான் விலை வைக்கும் உரிமை இல்லை, உற்பத்திக்கு தேவையான உபபொருட்கள், தண்ணீர், கூலியாட்களாவது தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு வழி செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. "இவ்வளவு கொஞ்சமா இடம் வச்சுகிட்டு எதுக்கு நீங்க கஷ்டப்படணும், உங்க கஷ்டத்தை எல்லாம் போக்குவதற்காகத்தான், உங்க நிலம் இருக்கிற பக்கம் அதிகம் கிடைக்கிற ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கப்போறோம்" என முதலுக்கே மோசம் செய்கிற அரசாங்கம் ஒருபக்கம்.

Vellai Yanai

வெளியில் இருந்துதான் விவாசயத்திற்கும் விவசாயிக்கும் பிரச்னை என்றில்லை. குடும்பத்திலேயே இருப்பதில் வயதானவர்கள்தான் இன்னமும் நிலமே கதி என கிடக்கிறார்கள். அடுத்த தலைமுறை சென்னைக்கும் பெங்களூருவுக்கும் திருப்பூருக்குமாக இடம்பெயர்கிறது. வராத தண்ணீருக்காக காத்திருந்து, பாடுபட்டு உழைத்து, அரிசியை கரையேற்றினால் கிடைக்கும் சொற்ப வருமானத்தைவிடவும் பலமடங்கு கூடுதல் தொகையை, மாத சம்பளமாக ஏசி அறைகளில் பெற்றுக்கொண்டு வேலை செய்வதை இளைஞர்கள் விரும்புவதில் ஆச்சர்யமில்லை.

Subramaniam Siva

இயற்கை கைகொடுப்பதில்லை, அரசு உதவுவதைவிடவும் உபத்திரமாகவே இருக்கிறது, யாரும் கண்டுகொள்வதுமில்லை என்ற பிரச்னை கலைத்துறைக்கு தற்போது எட்டத்துவங்கி இருக்கிறது. சமீபத்தில் வந்து வெளியான கனா உள்ளிட்டப் படங்கள் விவசாயப் பிரச்னையை பேச துவங்கி இருக்கின்றன. அதில் புதிய வரவு வெள்ளை யானை. தஞ்சையை பூர்விகமாகக்கொண்டதால் விவசாயத்தின்மீது தீராக்காதல் இயக்குநர் சுப்ரமணியம் சிவாவுக்கு உண்டானதில் ஆச்சர்யம் இல்லை. சமுத்திரகனி ஆத்மிகா என கைக்கும் கதைக்கும் அடக்கமான நடிகர்களைக்கொண்டு உருவாகியிருக்கிறது 'வெள்ளை யானை'. விவசாயத்திற்கும் விவசாயிக்கும் இருக்கும் எத்தனையோ அருமை பெருமையை பேச வந்திருக்கிறது வெள்ளை யானை. வெள்ளை யானை வரட்டும் வெற்றி பெறட்டும், விவசாயிகள் பிரச்னை கவனம் பெறட்டும்.

2018 TopTamilNews. All rights reserved.