• August
    26
    Monday

Main Area

Main



மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு

வாழைப்பூ  புளிக்கூட்டு
வாழைப்பூ புளிக்கூட்டு
Loading...

வாழை மரத்தில் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையுமே பயன்படுத்துகிறோம். இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. நமது சோம்பேறித்தனத்தால் சுத்தம் செய்வதற்கு தயங்கி வாழைப்பூவை சமையலில் எப்போதாவது ஒரு முறை தான் பயன்படுத்துகிறோம்.  வாழைப்பூ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, கணையத்தை வலிமையாக்குகிறது. பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை வாழைப் பூவிற்கு உண்டு. 


தேவையான பொருட்கள்
வாழைப்பூ            - 1
புளி                       - சிறிதளவு
கடலைப்பருப்பு  - 2டீஸ்பூன்
தேங்காய்                - 1/4மூடி
மோர்                - 1டம்ளர்
கா.மிளகாய்    - 3
உப்பு , எண்ணெய்    
உளுத்தம் பருப்பு  -தேவையான அளவு

செய்முறை
வாழைப் பூவை பறித்ததும், இரண்டு நாட்களுக்குள் சமைத்து விட வேண்டும். அப்போது தான் முழு பலன்களும் கிடைக்கும். முதலில் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து மோரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். புளியை திக்காக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு இவற்றை சேர்க்க வேண்டும். மோரில் ஊறிய வாழைப்பூவை சேர்த்து வதக்க வேண்டும். சிறிது தண்ணீர் தெளித்து விடுங்கள். தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு, புளிக்கரைசலை லேசாக ஊற்றி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து பதம் வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறலாம்.

2018 TopTamilNews. All rights reserved.