• August
    24
    Saturday

Main Area

Main



பேய்,பிசாசு,பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்தில் வழிபாடு செய்ய அவை நீங்கும்… பாடல் பெற்றதலங்கள் வரிசை - 16,வைதீசுவரன் கோவில்

பில்லி சூனியம்
பில்லி சூனியம்
Loading...

சீர்காழிக்கு தென்மேற்கில் 6 கி.மீ தொலைவில் இருக்கிறது திரு புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைதீசுவரன் கோவில். புள் - பறவையாகிய ஜடாயு,ரிக்-  என்கிற வேதம்,வேள்- முருகன்,ஊர் - சூரியன் ஆகியோர் வணங்கியதால் புள்ளிருக்கு வேள்ளூர்.

temple

10.70 ஏக்கர் பரப்பளவில்,ஐந்து பிரகாரங்களுடன் ஏழுநிலை ராஜ கோபுரம் கொண்ட பெருங்கொவில்.மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் வைத்தியநாதர். அம்மை தையல்நாயகி. தலமரம் வேம்பு,தீர்த்தம் சித்தாமிர்த்
தீர்த்தம்.இதுவன்றி,மேலும் 18 தீர்த்தங்களும் இத்தலத்தில் உண்டு.

temple

தலமரமான வேம்படியில் ஆதிவைத்தியநாதர் உள்ளார்.இங்குள்ள செல்வமுத்துக் குமாரசாமி ( முருகன் ) சந்நிதி மிகவும் பிரபலமானது. ஆலயத்தின் கீழ்திசையில் வைரவர், மேல்திசையில் வீரபத்திரர், தென்திசையில் கற்பக விநாயகர், வடதிசையில் காளியும் காவல் புரிகின்றனர்.

நேத்திரப்பிடி சந்தனம்,திருச்சாந்துருண்டை பிரசாதம் தரப்படுகிறது. அவற்றை உண்டால் எல்லா வித நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.சூரபத்மனை வெல்ல முருகன் வேல் வாங்கிய இடம்.இத்தலம் அங்காரக தலம் .நவக்கிரக தலங்களுள் இது செவ்வாய் தலம்.

ghost

பேய்,பிசாசு,பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்தில் வழிபாடு செய்ய அவை நீங்கும்.பிறவிப்பிணி மருத்துவராகிய ஆதிவைத்தியநாதப் பெருமாள்,தையல் நாயகி திருக்கரத்தில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும்,வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் வர 4448 நோய்களைத் தீர்க்கும் இடம்.

black magic

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களுள் 16/வது தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமரகுருபரர், படிக்காசுத்தம்பிரான்,சிதம்பர முனிவர், காளமேகப்புலவர்,இராமலிங்க சுவாமி, ஆகியோர் பாடிய தலம்.

திருக்கைலாய பரம்பரை திருத்தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில். தினம் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. செவ்வாய் கிழமை தோறும் ஆட்டு வாகனத்தில் அங்காரகனாகிய செவ்வாய் எழுந்தருளுவார்.

2018 TopTamilNews. All rights reserved.