• August
    21
    Wednesday

Main Area

Main



'கிறிஸ்துவரான வைகோ மாநிலங்களவைக்குள் நுழைவது கலாச்சாரத்தை சீர்குலைக்கும்' : சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பதிவு!

சுப்பிரமணியன் சுவாமி -வைகோ
சுப்பிரமணியன் சுவாமி -வைகோ
Loading...

புதுடெல்லி:  வைகோ மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சீர்குலைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

vaiko

கடந்த  2009ஆம் ஆண்டு  விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக வைகோ  மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை எம்பியாகிறார்.  அவரின் மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், அவரது மனு ஏற்பட்டு விட்டது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் மாநிலங்களவையில் நுழையவுள்ளார்.

 

இந்நிலையில், வைகோ மாநிலங்களவை எம்.பி ஆவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'வி.கோபால் சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடன்பாடு கொண்டவர். மிஷனரி கொள்கை உடைய இவர் மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சீர்குலைக்கும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சர்ச்சைகளுக்குப் பெயர்போன சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.