• March
    31
    Tuesday

Main Area

Main



வைரலான முகேஷ் அம்பானி-நீதா அம்பானி திருமண புகைப்படங்கள் – உள்ளே!

mukesh ambani
mukesh ambani

மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதிக்கு அறிமுகம் தேவை இல்லை. பல ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 13-வது இடத்தில் முகேஷ் அம்பானி இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 2002-ஆம் ஆண்டு திருபாய் அம்பானி மறைவுக்குப் பின் ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துக்களை, அண்ணன் தம்பிகள் பிரித்துக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அனில் அம்பானி வணிக உலகில் இருந்து காணாமல் போய் விட்டார். ஆனால் முகேஷ் அம்பானி இன்றும் நம்பர் ஒன்னாக திகழ்கிறார்.

ttn

முகேஷ் அம்பானிக்கும் – நீதா அம்பானிக்கும் 33 வருடங்களுக்கு முன்பு அதாவது 1985-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒவ்வொரு முறை இவர்களை காணும்போதும் மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே உணர முடியும். இருவரும் உலகின் மிக வெற்றிகரமான ஜோடிகளில் ஒருவர்.

ttn

இந்த நிலையில், முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் திருமண புகைப்படங்கள் திடீரென சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்தப் புகைப்படங்கள் இப்போதுதான் முதன்முறையாக வெளியாகியுள்ளன. இதில் நீதா அம்பானி பாரம்பரியமான வெள்ளை-சிவப்பு புடவையில் காணப்படுகிறார். மிகவும் அழகான குஜராத்தி பெண்ணாக அவர் புகைப்படத்தில் மிளிர்கிறார். அதேபோல முகேஷ் அம்பானி இந்த புகைப்படங்களில் க்ரீம் நிற குர்தா பைஜாமா அணிந்து மணமகனாக ஜொலிக்கிறார். நெட்டிசன்கள் இந்த திருமண புகைப்படங்களை கண்டு ஆச்சர்யம் அடைந்து ஷேர் செய்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.