• April
    05
    Sunday

Main Area

Main



21 வயசு ஆகலையா பீடி, சிகரெட், புகையிலைக்கு நோ......புகையிலை நுகர்வுக்கான சட்ட வயதை உயர்த்த மத்திய அரசு யோசனை...

சிறுவயதில் தவறான பழக்கம்
சிறுவயதில் தவறான பழக்கம்

பொதுவாக புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை தங்களது பள்ளி அல்லது கல்லூரி காலத்தில் தொடங்கி இருப்பார்கள். 18 வயது முதல் 21 வயது வரையிலான காலகட்டத்தில்தான் இளைஞர்கள் தங்களது நண்பர்களின் வேண்டுகோள் மற்றும் பேஷன் என்ற எண்ணத்தில் புகைப்பிடிப்பதை தொடங்க வாய்ப்புள்ளது. அந்த வயது இளைஞர்கள் புகையிலை துறையால் பெரிதும் குறிவைக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வர்த்தகர்கள் பீடி,சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

பொது இடத்தில் சிகரெட் பிடிக்கும் நபர்

இந்த சூழ்நிலையில், புகையிலை கட்டுப்பாட்டுக்கு சட்ட சீர்த்திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு சட்ட துணை குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்தது. அந்த குழு அண்மையில் தனது பரிந்துரையை சுகாதார அமைச்சகத்திடம் அளித்தது. அதில், புகையிலை நுகர்வுக்கான சட்ட வயதை உயர்த்த வேண்டும், விதிமுறை மீறலுக்கான அபராதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டவிரோத சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் வர்த்தகத்தை கண்காணித்தல் மற்றும் கண்காணிப்பு நெறிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்

சட்ட துணை குழுவின் பரிந்துரையடுத்து, பீடி,சிகரெட் உள்பட புகையிலை நுகர்வுக்கான சட்ட வயதை 18-லிருந்து 21ஆக உயர்த்த மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், புகையிலை நுகர்வுக்கான சட்ட வயதை 21ஆக உயர்த்துவதால், ஒவ்வொரு ஆண்டும் புகையிலை நுகர்வுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். பெற்றோர்கள் கூட தங்களது குழந்தைகளை புகையிலை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார்.
 

2018 TopTamilNews. All rights reserved.