kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ப. சிதம்பரம் எங்கே ? 2 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன்!

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்
Loading...

புதுடெல்லி: டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை புரிந்துள்ளனர்.

chithambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்ஜாமீன் மனு தள்ளுபடியான  24 மணி நேரத்துக்குள் 3 வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு வருகை புரிந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. 

cbi

இந்நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு ப. சிதம்பரத்துக்கு சிபிஐ  சம்மன் அனுப்பியுள்ளது. குறிப்பாக ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள வீட்டில் இல்லாததால் வீட்டு சுவரில் அழைப்பாணையை சிபிஐ ஒட்டியது. மேலும் ப.சிதம்பரத்தின் இ-மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் இன்னும் ஆஜராகவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் இல்லத்துக்கு வந்துள்ளனர். 

cbi

முன்னதாக  மத்திய அரசு ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.