• December
    15
    Sunday

Main Area

Main



'எனக்கு பட்டப்பெயர்கள் வேண்டாம்' : உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

udhy

நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்கள், திருமண விழாக்கள் என முழுநேர அரசியல்வாதியாக வலம்  வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் கழக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். 

udhay

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தைக் கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது.

 

மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 


 

2018 TopTamilNews. All rights reserved.