• August
    20
    Tuesday

Main Area

Main



உபர் செயலியில் இனி பயணிகள் இலவசமாக டிரைவருக்கு வாய்ஸ்கால் மேற்கொள்ளலாம்

uber
uber
Loading...

மும்பை: உபர் செயலியில் இனி பயணிகள் இலவசமாக டிரைவருக்கு வாய்ஸ்கால் மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் உபர், ஓலா போன்ற பல்வேறு கால் டாக்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி பயணிகளை தம்பக்கம் ஈர்ப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் மூலம் அதிக அளவில் கால்டாக்சிகளை மக்கள் பயன்படுத்த வைப்பதே அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதற்காக கால் டாக்சி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அதன் ஒரு அங்கமாக பிரபல கால் டாக்சி நிறுவனமான  உபர், தற்போது புதிய அம்சம் ஒன்றை தங்கள் மொபைல் ஆப்பில் அறிமுகம் செய்துள்ளனர்.

அதன்படி பிப்.9-ஆம் தேதி முதல் உபர் மொபைல் ஆப்பில் வி.வோ.ஐ.பி காலிங் அம்சம் (VoIP Calling feature) இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதாவது வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோடோகால் அம்சம் ஆகும். இதன் மூலம் உபர் பயணிகள் இனி தங்கள் டிரைவருக்கும், உபர் டிரைவர்கள் தங்களது பயணிகளுக்கும் இலவசமாக வாய்ஸ்கால் மேற்கொள்ள முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதுகுறித்த அப்டேட் சர்வதேச அளவில் உபர் செயலியில் இடம்பெற்றதை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.