• August
    26
    Monday

Main Area

Main



இந்திய பாஸ்பார்ட்டுக்கு துபாய் முதல் மரியாதை! ஒரு சின்ன கண்டிஷனுடன்!

Indian Passport
Indian Passport
Loading...

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு விசிட் விசாவில் செல்வோர் நுழைவுக் கட்டணமாக ஆயிரத்து 874 ரூபாயும், 375 ரூபாய் சேவை கட்டணமும் செலுத்த வேண்டும். அதிகப்பட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு மற்றும் ஒருமுறை காலநீட்டிப்பு செய்வதற்கான புதுப்பிப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 687 ரூபாயும், சேவைக் கட்டணமாக 375 ரூபாயும் செலுத்த வேண்டும். விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UAE

இந்த உடனடி விசிட் விசாவுக்கு இந்திய பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதுமா? இல்லை, கூடுதலாக, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசா வைத்திருக்கவேண்டும். மேற்படி, இந்திய பாஸ்போர்ட் + ஐரோப்பிய யூனியன்/இங்கிலாந்து விசா வைத்திருப்போர், ஐக்கிய அரபு எமிரேட்டின் உடனடி விசிட் விசா பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.