• August
  24
  Saturday

Main Area

Twitter
தர்காவுக்கும் போவேன்... குருத்வோராவுக்கும் செல்வேன்... நடிகர் மாதவன் கோபம்

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், இந்துக்கள் ஆவணி அவிட்டத்தையும் சேர்த்தே கொண்டாடினார்கள். வட இந்தியர்கள் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்களை சுதந்திர தின வாழ்த்துக்களுடன் பரிமாறிக் கொண்டார்கள். இந்நிலையில், நடிகர் மாதவன், தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சார்.

madhavan

ரசிகர்களுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்த மாதவன், ரக்‌ஷாபந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களையும் கூறி, தான் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றிய குடும்ப புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். நடிகர் மாதவன் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர், மாதவனின் வீட்டுப் பூஜையறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அதுயென்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் தான்” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு காட்டமாக பதிலடியை கொடுத்துள்ள மாதவன்,  ''உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. விரைவில் நீங்கள் உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து குணம் அடைவீர்கள். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்கவில்லை, இல்லையெனில் சீக்கிய மதத்துக்கு மாறினேனா? என கேள்வியை கேட்பீர்கள். எனக்கு தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. 

உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் உள்ளது. அங்கிருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்துள்ளது; சிலவற்றை நானே வாங்கி உள்ளேன். என்னுடைய வீட்டில்  எல்லா மத நம்பிக்கையை சேர்ந்தவர்களும் பணி செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்து படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர். எனது  சிறு வயதியிலிருந்தே இது எனக்கு கற்பிக்கப்பட்டது. ஆம், எனது அடையாளத்தை பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில், எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்று கொடுக்கப்பட்டுள்ளது. 
எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனை பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்கு செல்வேன், குருத்வாராவுக்கு செல்வேன். தேவாலயத்துக்கு செல்வேன். அருகில் கோவில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படி திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துப்பட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்று கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும் எனக் குறிப்பிட்டிருக்கார் gowtham Fri, 08/16/2019 - 17:30
madhavan Twitter மாதவன் சினிமா

English Title

Actor Madhavan is angry

News Order

0

Ticker

0 ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பிய நான்கு டிவிட்டர் கணக்குகள் திடீர் முடக்கம்!

ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்ட நான்கு டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

jAMMU

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மசோதாவைத் தாக்கல் செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

TWITTER

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராகவும்,  தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பியதாகத் தற்காலிகமாக நான்கு டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  பாதுகாப்பு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் இந்த கணக்குகளை முடங்கியுள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் மேலும் நான்கு கணக்குகள் விரைவில் முடக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

manikkodimohan Tue, 08/13/2019 - 08:32
Jammu Kashmir Twitter டிவிட்டர் இந்தியா

English Title

Four Twitter handles suspended for alleged anti-India propaganda

News Order

0

Ticker

0 இன்னைக்கு தேசிய கேர்ள் ஃபிரண்ட் தினமாம்! ட்விட்டர் ட்ரெண்டும் இதாங்க...

இன்று பெண் நண்பர்கள் தினம். இந்த செய்தியையே ட்விட்டரை பார்த்துதான் தெரிஞ்சுக்க வேண்டியதா.. இருக்கு! ட்விட்டர் ட்ரெண்டிலிருக்கும் #NationalGirlfriendDay என்ற ஹேஷ்டேக்கில் பலர் அவர்களது கேர்ள் பிரண்ட் பற்றிய பதிவுகளை பதிவிட்டுள்ளனர். 

Sho

'கேர்ள் ஃப்ரெண்ட்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அட...லவ்வர்தானே! என்றுதானே பலரின் மனம் நினைக்கும். ரத்த சொந்தங்களிடம் கூட இல்லாத ஒரு பிணைப்பு, நண்பர்களிடம் என்றுமே உண்டு. அது எதிர்பாலினத்து நட்பு என்றால், இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். அதுதான் இயற்கை. அதை கொண்டாடுவது அவசியம். அதற்காகதான் இந்த கேர்ள் ஃப்ரெண்ட் டே... 

yt

சிலருடைய டிக்‌ஷனரியில் கேர்ள் ஃபிரெண்ட் என்றால் லவ்வர், சிலருடைய டிக்‌ஷனரியில் அது தோழி, இன்னும் சிலருக்கு கேர்ள் ஃபிரெண்ட் என்றால் பெஸ்டீ.... இப்படி பல கோணங்கள் ஆனால் அர்த்தம் ஒரு எதிர்பாலின உறவு அவ்வளவுதாங்க... உதாரணத்துக்கு பிரியமான தோழி, மாதவன் ஸ்ரீதேவி நட்பு, ஆட்டோகிராஃப் சேரன், சிநேக நட்பக்கூட எடுத்துகலாம். 

32

ஓப்பனா சொல்லனும்னா.... சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள, உணர்வுகளை புரிந்துக்கொள்ள, தினமும் நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து கொள்ள, உதவி செய்ய... இத்தகைய தேவைகளுக்கு கேர்ள்  ஃபிரண்ட் தேவைப்படுகிறது. சின்ன சின்ன சீண்டல்கள், சின்ன சின்ன சண்டைகள், ஆர்ப்பாட்டம், கோவம் என அனைத்துமே இந்த ஆண்- பெண் நட்புக்கு உண்டு 

er

நட்பு என்பது பின்னாளில் தோன்றப்போகும் காதலுக்கான அஸ்திவாரமாகத்தான் பல திரைப்படங்களிலும் காட்டப்படுகிறது. அதுவும் சிலருக்கு நடக்கிறது. என் நண்பன் இருக்கான் என ஒரு பெண்ணும், என் பெஸ்டீ இருக்கா என  சொல்லி கெத் காட்டும் கைஸூம் இன்றும் இருக்கிறார்கள். இதற்காக இந்த தினம் கொண்டாடுவதில் தப்பே இல்லை...! 
    

aishwarya Fri, 08/02/2019 - 19:33
Twitter Trend National Girl friend Day Girl Friend Girl Friend இந்தியா

English Title

National Girl friend Day- Twitter Trend

News Order

0

Ticker

1 பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு நோ சொன்ன ஆனந்த் மகிந்திரா

வாகனம், வேளாண், கட்டுமான கருவிகள் என பல துறைகளில் கொடி கட்டி பறக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பெரும் கோடீஸ்வரர். டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார் ஆனந்த் மகிந்திரா. உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும், தனது அனுபவங்களையும் டிவிட்டரில் மகிந்திரா பகிர்ந்து கொள்வார். டிவிட்டரில் அவரை 70 லட்சம் பேருக்கு மேல் பின்தொடருகின்றனர்.

மகிந்திரா கூட்டம்

சமீபத்தில் ஆனந்த் மகிந்திரா தனது நிறுவன கூட்டத்தின் படத்தை வெளியிட்டு அது குறித்து தகவலை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். மகிந்திராவின் பதிவை பார்த்த அவரை டிவிட்டரில் பின்தொடரும் ஒரு பெண்மணி நிறுவன கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் சில்வர் பாட்டில்கள் இருக்கலாம். உங்களது கவனத்துக்காக குறிப்பிடுகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

மகிந்திரா கூட்டம்

அதற்கு ஆனந்த் மகிந்திரா, ஆமாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் தடைசெய்யப்பட வேண்டும். அன்று அவற்றை (பிளாஸ்டிக் பாட்டில்கள்) பார்ப்பதற்கே மிகவும் சங்கடமாக இருந்தது என்று பதில் பதிவு செய்து இருந்தார். மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனந்த் மகிந்திரா தன்னை பின்தொடரும் ஒரு பெண்மணியின் பதிவுக்கு பதில் அளித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

subramani Wed, 07/17/2019 - 12:06
anand mahindra plastic bottle Twitter பிளாஸ்டிக் பாட்டில் தடை ஆனந்த் மகிந்திரா டிவிட்டர் ஆனந்த் மகிந்திரா இந்தியா

English Title

plastic bottles banned in corporate boardrooms- anand mahindra

News Order

0

Ticker

1 தினமலரை வசைப்பாடும் நெட்டிசன்கள்.... போகாத சந்திராயனை விண்ணில் செலுத்திய கொடுமை.!

சந்திராயன் 2 செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் பணி கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

sss

முற்றிலும் இந்திய தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணியளவில் 3.8டன் எடைகளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்தது. 
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது 56 நொடிகளில் நிறுத்தப்பட்டது. இன்னும் 30 நாட்களில் மீண்டும் விண்ணில் பாயும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ss

ராக்கெட்டை உந்திச் செல்லக்கூடிய திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட எரிபொருட்கள் ராக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டை முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர்தான் தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

tt
கவுண்டவுன் பாதியிலே நிறுத்தப்பட்டு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் தினமலர் நாளிதழ் சந்திராயன் விண்ணில் ஏவப்பட்டதாக முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

ll

ஏற்கனவே தினமலர் மீது அதிருப்தியிலிருக்கும் நெட்டிசன்களும், பொதுமக்களும், விண்ணுக்கு செல்லாத செயற்கைக்கோளை செலுத்திய தினமலரை வசைப்பாடி வருகின்றனர். 

aishwarya Mon, 07/15/2019 - 19:43
Dinamalar Twitter Chandrayan 2 Dinamalar தமிழகம்

English Title

Today Twitter Trending

News Order

0

Ticker

1 
மரம்

#தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்! ட்விட்டரில் விழிப்புணர்வு செய்யும் நெட்டிசன்கள்!! 

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில, தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் ஒருபுறம் போராட்டம் நடத்த, சமூக ஆர்வல...


அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் டிவிட்டரை ஹேக் செய்த பாகிஸ்தான் இணைய கும்பல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் டிவிட்டர் கணக்கைப்  பாகிஸ்தானை சேர்ந்த இணைய கும்பல் ஹேக் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்கட்சி என்பதால் அலட்சியம்... அதிகாரிகளை கூனிக் குறுக வைத்த திமுக எம்.எல்.ஏ..!

ஆய்வுக்கு வரமறுத்த வி.ஏ.ஓ.,வை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கூனி குறுக வைத்துள்ளார். trpraja

முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியுமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா. மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ.,வான இவர் மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. 

பொதுவாகவே ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பை எதிர்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அதிகாரிகள் நல்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதுமே இருந்து வருகிறது. மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் அதே நிலைதான். ஓடியாடி அவர் மக்கள் பணி செய்தாலும் அதிகாரிகள் அலட்சியல் காட்டி வருகிறார்கள். trpraja

இதற்கு பாடம் புகட்ட நினைத்த டி.ஆர்.பி.ராஜா, வி.ஏ.ஓ ஒருவருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து அழைத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், ’’இன்று மன்னார்குடி யில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு கிராம நிர்வாக அதிகாரியை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். இனிமேலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இன்று #மன்னார்குடி யில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு vao வை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன் ?
இனிமேலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.?? #திமுக pic.twitter.com/GAoz4Fdlb6

— T R B Rajaa (@TRBRajaa) June 7, 2019

இந்தப்பதிவிற்கு மக்கள் ஆதரவு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பொதுவாக பலமுறை அழைத்தும் வராதவர்களை ‘உங்களை என்ன வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால் தான் வருவீர்களோ’’ எனக் கூறி அதிருப்தி வார்த்தைகளை வெளிப்படுத்துவது வழக்கம். அதைத்தான் இப்போது செய்திருக்கிறார் டி.ஆர்.பி.ராஜா. trp

அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் ஆளும்கட்சி எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற பாகுபாடு பார்க்காமல், மக்கள் நலன் எது என்று பார்த்துச் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். ஆனால், மக்களின் அடிப்படை வசதிக்காக எதிர்க் கட்சியைச் சேர்ந்த  எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யும் பணத்தை அரசு அதிகாரிகள் நியாயமற்ற முறையில் புறக்கணிப்பதாகவும் முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. 

Thijai Fri, 06/07/2019 - 19:25
TRP Raja dmk Mannarkudi Twitter டி.ஆர்.பி.ராஜா தமிழகம்

English Title

MLA TRB Raja on twitter

News Order

0

Ticker

1
hydrocarbon

நேசமணிக்கு டஃப் கொடுக்கும் ஹைட்ரோகார்பன்... காமெடி மட்டுமல்ல சீரியஸான விஷயத்துக்கும் நாங்க வருவோம்- நெட்டிசன்கள்!

தமிழகத்தின் டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை ஆகிய பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு எதிராக...


Modi

சமூக வலைதளங்களில் புது அவதாரம் எடுத்துள்ள மோடி! இனிமேதான் டா பார்க்க போரீங்க இந்த காளியோட ஆட்டத்த!!

பிரதமர் மோடி பதவியேற்றதற்கு சில நிமிடங்கள் முன்பு தனது சமூக வலைதள் பக்கங்களின் முகப்பு படத்தை நீக்கிவிட்டு வேறு புதிய படத்தை பதிவிட்டுள்ளார். 


Job Offer

நல்லா கதைவிட தெரிஞ்சவங்களுக்கு ட்விட்டர் கம்பெனியில வேலை!

அமெரிக்காவில் இருக்கிற தங்கள் அலுவலகத்தில் பணிபுரிய, ட்விட்டர் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கையே கையாள திறமையான பணியாள் ஒருவரை தேடி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு செய்தியை ...


சின்மயி

வைரமுத்து மேட்டருக்குக் கூட இந்த அளவுக்கு பொங்கலையேம்மா நீ?’...மீண்டும் ஒரு சின்மயி பஞ்சாயத்து..

தன் சொந்தப் பிரச்சினைக்கும் பொள்ளாச்சி விவகாரத்துக்கும் ட்விட்டரிலேயே கம்பு சுத்திக்கொண்டிருந்த சின்மயி முதல் முறையாகத் தெருவில் இறங்கிப் போராடுவதற்கு போலீஸ்  அனுமதி கேட்டிருப்பது


twitter birthday

இன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது? எவ்வளவு சம்பாரிக்கிறார்கள் தெரியுமா?

இன்று உலகில் அநேகம் பேரால் விரும்பப்படும் சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு பிறந்த நாள். அதாவது ட்விட்டர் தளத்தில் முதல் செய்தி இன்று தான் பகிரப்படாதாம். அது சரி இந்த ட்விட்டர் எப்படி ...priyankagandhi

ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்


ved

வேதிகா ஆர்மியின் அட்டகாசம்?

இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கும் வேதிகாவுக்கு போன் செய்து விசாரிக்கும் அளவு போயிருக்கிறது வேதிகா ஆர்மி.


thalathalapathy

#தேவாங்குஅஜித் #ஆமைவிஜய்: தல-தளபதி ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

தல-தளபதி ரசிகர்கள் ஒரு சிலரால் இந்திய அளவில் டிரெண்டான மோசமான அஜித், விஜய் ஹேஷ்டேக் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தளபதி விஜய்!

சென்னை: ட்விட்டரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்திய நபர்கள் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல அரசியல் தலைவர்களின் பெயர்களே இடம்பெற்றிருந்தாலும் சில திரைப்பட பிரபலங்களின் பெயர்களும் இடம்பிடித்துள்ளது.

thalapathyvijay

அந்த வகையில் டாப் 10 பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர் தளபதி விஜய் 8வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நடிகர் விஜய் தவிர மற்ற அனைவருமே இந்த ஆண்டு பல ட்வீட்களை போட்டி பிரபலமானவர்கள். நடிகர் விஜய் இந்த ஆண்டில் வெறும் 3 ட்வீட்களை மட்டுமே பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 பட்டியல் :

 1. பிரதமர் மோடி
 2. ராகுல் காந்தி
 3. அமித்ஷா
 4. யோகி ஆதித்யநாத்
 5. அரவிந்த் கெஜ்ரிவால்
 6. பவன் கல்யாண்
 7. ஷாருக்கான்
 8. விஜய்
 9. மகேஷ்பாபு
 10. சிவராஜ்சிங் சௌஹான்

 

amirthavarshini Sun, 12/23/2018 - 16:39
Thalapathy Vijay Twitter India 2018 Most Talked Indian Twitter Moments 2018 vijay Thalapathy Fans Twitter sarkarvijay சினிமா

English Title

Thalapathy Vijay: Most talked Indian Celebrity in Twitter 2018 
taapsee

‘உங்கள் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை’ - டாப்சியிடம் வாயைவிட்டு அசிங்கப்பட்ட ரசிகர்!

பிரபல நடிகை டாப்ஸியின் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை என தூது அனுப்பிய ரசிகருக்கு அவர் ‘கூலாக' பதிலடி கொடுத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.