• November
    22
    Friday

Main Area

Main



கபத்தை குறைக்கும் துளசி டீ

 துளசி டீ
துளசி டீ

கோயிலுக்கு செல்லும் போது ஆர்வமாய் துளிசி தீர்த்தம் வாங்கிக் குடிக்கிறோம். மற்றப்படி எப்போதாவது சளித் தொல்லை வந்தால் தான் நாம் துளசி இலைகளைத் தேடிவோம். வாரம் ஒரு நாள் விதவிதமான தேநீரை ரசித்து ருசிக்கலாம். ஒரு நாள் இஞ்சி பயன்படுத்தி தேநீர் தயாரித்துப் பாருங்கள். இன்னொரு நாள் துளசி இலைகளைப் பயன்படுத்தி தேநீர் தயாரித்துப் பாருங்கள்.சுவைக்கு சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும். துளசி இலைகளைப் பயன்படுத்தி தேநீர் தயாரிக்கும் பொழுது, உடலில் இருக்கும் கபம் மட்டுபடுகிறது. 

tulsi tea

துளிசியில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், மக்னீஷியம் என்று நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. நெஞ்சுச்சளி நீங்கும், கபத்தை அறுக்கும், தலைவலியைப் போக்கி உற்சாகத்தைத் தரும். ஆரோக்கியத்தை சமையலில் அறிமுகப்படுத்த வேண்டியது அம்மாக்களின் கடமை தானே... இனி தினந்தோறும் அடுப்படியிலிருந்து ஆரோக்கியத்தை ஆரம்பிப்போம்.
தேவையானவை: 
துளசி இலைகள் –  15 முதல்  20 வரை
ஏலக்காய் – 4 
சுக்கு – சிறிய துண்டு
தேன் – 2 டீஸ்பூன் 
பால் – கால் கப்

tulsi tea

செய்முறை: 
ஒரு டம்ளர் நீரில் துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். துளசி இலைகளுடன் நீர் நன்றாக கொதித்து வாசம் வந்தவுடன் அதில் ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி சேர்த்து கொதிக்க விடவும். நீர் அரை டம்ளராக வற்றியதும், அதில் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கி வடிகட்டவும்.  
வடிகட்டியதும், அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து பருகலாம். அடுப்பில் கொதிக்கும் பொழுது தேன் சேர்க்கக் கூடாது. தேனை அடுப்பிலிருந்து இறங்கியவுடன் தான் சேர்க்க வேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.