• February
    29
    Saturday

Main Area

Main



எடப்பாடி கையில் டி.டி.வியின் ரகசிய ஃபைல்... அலறும் சசிகலா குடும்பம்..!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

 

போயஸ்கார்டனுக்கு நினைத்த நேரத்தில் சென்றவர்கள், சர்வ அதிகாரத்துடன் இருந்தவர்கள் எல்லாம் இபோது ஒடுங்கி கிடக்கிறார்கள். காரணம், அந்த அனைத்து முக்கிய பைல்களும் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருப்பது தான். அவர் வெளியே விட்டால் அமலாக்க துறை மட்டுமல்ல... லஞ்ச ஒழிப்பு துறையும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவோ அல்லது அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றோ வழக்கு போடலாம் என்பதால் அமைதியாக இருக்கிறார்கள்.ops

டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல சசிகலாவின் பைலும் எடப்பாடியாரின் கைவசம் உள்ளது என்கிறார்கள். அவர் வெளியே வந்து ஆட்டத்தை கலைக்கப் பார்த்தால் அந்த பைலை வைத்து சசிகலா மீதும் சாட்டை சுழற்றப்படும் என நினைத்து பைல்களை பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. அந்த பைல்கள் சாதாரணமானவை அல்ல. அதில் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரை பற்றியும் ரகசியங்கள் அடங்கி இருக்கிறது.seeman

அதனை வைத்தே தனக்குக் கீழ் அதிமுக நிர்வாகிகளை அடக்கி வைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். ஆக மொத்தம் கடிவாளம் எடப்பாடியாரின் கையில் வசமாக சிக்கி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி உள்ளனர். இது அவர் இன்னும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடவில்லை. விரைவில் வருவேன் என்று சொல்வதை போல அதிமுகவுக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.