• August
    21
    Wednesday

Main Area

Main



டி.டி.வி.,யை தெறிக்கவிடும் எடப்பாடி... பிரேமலதாவை கதற விடும் மு.க.ஸ்டாலின்..!

பிரேமலதா
பிரேமலதா
Loading...

கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வடசென்னை, திருச்சி, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கவே மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்தது தேமுதிக தலைமை.M K Stalin

தொடர்ந்து மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக-பாஜகவுடனான கூட்டணி தொடரும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன், தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அமமுகவை தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகளும் தொடர்ந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருவது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.