• October
    21
    Monday

Main Area

Main



தங்கத்தை தூக்கி அடித்த டி.டி.வி... அதிர வைக்கும் பின்னணி..!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் தரப்பு அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துவிட்டது. காரணம் டி.டி.வி.தினகரனுக்காக  பல கோடி கடனை வாங்கிக் கொடுத்துள்ளார். thangamஅமமுக படுதோல்வியடைந்த பிறகு டி.டி.வி.தினகரன் லட்சணத்தை தெரிந்து கொண்டு கடன்  கொடுத்தவர்கள்  தங்கத்தின் அங்கத்தை நெருக்கியுள்ளனர்.  இதனை எடுத்துச் சொல்லி கடனை அடைக்கச் சொல்லி அடிக்கடி கேட்டுள்ளார் தங்க தமிழ்செல்வன். ttv

பிறகு டி.டி.வியின் உதவியாளரான ஜனாவுக்கு இருக்கும் மரியாதையும் செல்வாக்கும்  உண்மையான விசுவாசிகளுக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட  தங்க தமிழ்செல்வன் அதனை மீட்டெடுக்க விரும்பி இருக்கிறார்.  அதற்காகவே அதிமுகவில் இணைய தூது விட்டுள்ளார். ஓ.பிஎஸ்  மற்றும் அவரது மகனுக்கு செக் வைக்க சரியான ஆள் தங்கம்தான் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.  கடனை அடைக்க வேண்டும். அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போகக்கூடாது என்ற நோக்கில் தங்கம் இருப்பதை டி.டி.வி. தரப்பு மோப்பம் பிடித்து விட்டது.

 sasikala

அதனால், மதுரை மாவட்ட நிர்வாகி செல்லப்பாண்டியனிடம் தங்கம் பேசிய  ஆடியோவை வெளியிட்டு அதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு விட்டது டி.டிவி தரப்பு. இதன் மூலம் அவரை கட்சியில் இருந்து எளிதில் நீக்கலாம் என்பது தான் டி.டி.வியின் முடிவு. சில லட்சங்களுடன், லட்சியங்களுடன் புது கட்சிக்கு வந்தேன். இப்போது கடன்காரனாக போகிறேன் என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார் தங்க தமிழ்செல்வன். அவரது இணைப்புக்கு ஓ.பி.எஸ்  தடை சொல்ல, மாநில பொறுப்பு கொடுத்து சென்னையில் தங்க வைத்துவிடலாம் என்று எடப்பாடி, ஓ.பி.எஸை சமாதானம் செய்து வருகிறார்.
 

2018 TopTamilNews. All rights reserved.