• October
    15
    Tuesday

Main Area

TTV Dhinakaran
குமாரசாமி வழியில் அரசியலுக்கு முழுக்கு... டி.டி.வி.தினகரன் போடும் திடுக் திட்டம்..!

கர்நாடக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ள குமாரசாமி, அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெருபான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. என்றாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு குமாரசாமி முதல்வராக இருப்பது பிடிக்கவில்லை.

ttv

இதனால் அவர் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்தே சோதனைகளை சந்தித்து வந்தார். என்றாலும், சமாளித்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். இறுதியாக அவருக்கு எதிராக 14 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதுடன் ராஜினாமாவும் செய்தனர். இதனால் அவரது ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதனால் 14 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் ‘‘தற்போதைய அரசியல் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். ஜாதி மோகம் பற்றிய அரசியல் நல்ல மக்களுக்கானது அல்ல. என்னுடைய குடும்பத்தை கொண்டு வரமாட்டேன். நான் அரசியலில் இருந்து விட்டேன். தற்போது என்னை அமைதியாக வாழ விடுங்கள். அரசியலில் தொடரமாட்டேன். நான் அரசியலில் இருக்கும்போது சிறப்பாகவே செய்தேன். மக்களுடைய மனதில் இடம் பிடிக்க விரும்புகிறேன்.

sasikala

அரசியலில் இருந்து விலகுவதை குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. அதேபோல் முதல்வரானதும் ஒரு விபத்தே. கடவுள் எனக்கு இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இதைவிட மற்றவைகளால் திருப்தியடைய முடியாது. 14 மாதங்களாக நான் மாநில வளர்ச்சியை நோக்கி வேலை செய்துள்ளேன். எனக்கு அந்த திருப்தி உள்ளது’’ என்றார்.

இதை கேள்விப்பட்ட தினகரன் தானும் அரசியலில் இருந்து விலகலாம் என நினைப்பதாக சின்னம்மாவிடம் கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்ட சின்னம்மா சிறையில் ரத்தக்கண்ணீர் வடித்ததாக வார்டன் சொன்னார். ஜெயலலிதா விரட்டி அடித்த போதே கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓடி இருக்கலாம் தெரியாத்தனமா ஆர்.கே நகரில் குக்கர் பிசினஸ், ஓட்டுக்கு துட்டு குடுத்து ஏமாந்தது தான் மிச்சம். என்றும் புலம்பி இருக்கிறார்.

sasikala

“இந்த இரட்டை முதல்வர்களை ஒன்னும் பண்ண முடியல. என் முதல் அமைச்சர் கனவும் கானல் நீரானது. கட்சி தாவல் போய் இப்போது என் கட்சியே தாவலில் உள்ளது. வாழ்க்கை வெறுத்து விட்டது. ஒப்புக்கு சப்பாணி கட்சி நடத்தும் என் பேச்சை கேட்கவும், மதிக்கவும் மக்கள் ஏமாளி அல்ல; கோமாளி அல்ல. என் அறை கூவலில் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியலில் இருந்து விலகுவதை குறித்து தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்.” என்கிற முடிவில் இருக்கிறார்.

karuppan Fri, 10/11/2019 - 07:43
TTV Dhinakaran sasikala ammk டி.டி.வி.தினகரன் அரசியல்

English Title

Kumaraswamy dive into politics along the way ttv dhinakaran

News Order

0

Ticker

1 சிறைக்குள் சிக்க வைத்த டி.டி.வி.தினகரன்... வில்லங்கத்தில் மாட்டிக் கொண்ட சசிகலா..!

‘சிறைதுறை விதிகளின்படி நன்னடத்தை கைதிகளை மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும். ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சுடிதர் போட்டுக் கொண்டு ஷாப்பிங் போய்விட்டு வந்தது விதிமுறை மீறல். 

இதற்காக அவருக்கு சில நாட்களோ, சில மாதங்களே கூடுதலாக சிறை தண்டனை கிடைக்கலாம். ஆனால் முன்கூட்டியே விடுதலை என்பது வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அடுத்து அறிக்கையை கசிய விட்டது சசிகலாவை சீக்கிரமே வெளியே வரக்கூடாது என்பதற்காகத் தான் என்கிற தகவலும் ஓடுகிறது. இதில் உயர் மட்ட அளவில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை. 

டி.டி.வி.தினகரன்- புகழேந்தி மோதல் போன்ற விஷயங்களும் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாட்டில் நடந்ததா? டி.டி.வி.தினகரன் ஏற்பாட்டில் நடந்ததா? என்பதே சசிகலாவின் உறவினர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. வெளியே வந்தால் கணக்கு கேட்பார்களோ? என்பதால் டி.டி.வி.தினகரன் தரப்பே ஏதாவது வில்லங்கமாக செய்து இருக்கலாம் என்ற பேச்சும் கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

karuppan Thu, 10/10/2019 - 22:57
TTV Dinakaran, elections, bold speech, admk, ammk, sasikala TTV Dhinakaran டி.டி.வி.தினகரன் அரசியல்

English Title

TTV Dhinakaran caught sasikala in jail

News Order

0

Ticker

1 டி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் அப்பு... கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..!

டி.டி.வி.தினகரனை புகழேந்தி ஒரு பிடி பிடித்து விட்டார். மனதில் பல மாதங்களாக தேக்கி வைத்து இருந்தை எல்லாம் கொட்டி தீர்த்துட்டார்.

சசிகலா

இதை நேரலையில் பார்த்த டி.டி.வி.தினகரன் கொந்தளித்து போய்விட்டாராம். என்னை எப்படி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய சொல்லலாம். நான் கட்சியை கலைத்து விடுவேனா..?  வாய்க்கு வந்தபடி பேசிட்டு போனால் நான் என் இன்னொரு முகத்தை காட்ட வேண்டி இருக்கும் என்று தினகரன் பேசியதாக அடிபொடிகள் மத்தியில் பரபரப்பாக பேச்சுகள் எழுந்துள்ளது.

ஸசஸாஸச்

புகழேந்தியின் பேச்சில் சசிகலா வெளியில் வந்தாலும் டி.டி.வி.தினகரன் தரப்பை ஆதரிக்காது. அவர் எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிப்பார் என கூறினார். டி.டி.வி.தினகரன் ஒரு வெத்துவேட்டு அவர் தரப்பில் ஸ்லீப்பர் செல்கள் யாரும் கிடையாது. இடைத்தேர்தல், பொதுத் தேர்தலில் எவ்வளவு வாங்கினார்? எவ்வளவு சுருட்டினார் என்ற தகவல் என்னிடம் உள்ளது.சசிகலா

அதை தேவைப்படும்போது வெளியிடுவேன் எனக் கூறினார். அநேகமாக சசிகலாவின் ஒப்புதல் பெற்று டி.டி.வி.தினகரன் சுருட்டிய பணம் பற்றிய தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற ரீதியில் தான் புகழேந்தியின் பேச்சும், செயலும் இருக்கிறது என்கிறார்கள்.

karuppan Mon, 10/07/2019 - 09:17
டி.டி.வி.தினகரன் TTV Dhinakaran sasikala சசிகலா அரசியல்

English Title

isikala put up for ttv Dhinakaran ... The Mannargudi family grant

News Order

0

Ticker

1 நடுத்தெருவுக்கு இழுத்து வந்த டி.டி.வி... அநாதையாகத் தவிக்கும் ஆதரவாளர்கள்..!

நாங்குநேரியில்  இடைத்தேர்தல் வந்த பிறகு தொகுதியில தேர்தல் பணிக்கு பதிலாக குழப்பம்தான் அதிகம் நிலவுகிறது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ்  இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் அமமுக தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் அமமுக ஸ்டிராங்காக இருந்த  நிலையில் மக்களவை தேர்தல் தோல்வியால் துவண்டு போன 3 மாவட்ட செயலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் இணைந்து விட்டனர். 

இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலை குறிவைத்து அமமுகவினர் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். இதற்காக தலைவர்கள் பிறந்த நாளுக்கு கூட களக்காட்டிற்கு சென்று மாலை அணிவித்து தொகுதிக்குள் சொகுசு கார்களில் பந்தாவாக வலம்  வந்தனர். ஆனால், கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே போட்டியிடுவோம் என டி.டி.வி.தினகரன் அறிவித்ததால் தண்ணீரில் விழுந்த பந்து போல அமமுகவினர் முடங்கி விட்டனர்.

 தற்போது அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே  களத்தில் உள்ள நிலையில் அமமுகவினர் தேர்தல் களத்தில் யாருக்கும் ஆதரவாக பிரசாரம் கூட செய்ய முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல உள்ளனர். தொகுதியில் கணிசமாக வாக்கு இருந்தும் அறுவடை செய்ய முடியவில்லையே  என கையறு நிலையில் இருக்கிறனர். டி.டி.வி.தினகரனை நம்பி நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக புலம்பி வருகின்றனர்.

karuppan Thu, 10/03/2019 - 21:53
By Election TTV Dhinakaran ttv dhinakaran, tamilisai soundararajan, bjp, ammk டி.டி.வி.தினகரன் அரசியல்

English Title

ttv dhinakar orphaned supporters who were dragged into the middle

News Order

0

Ticker

1 சசிகலா உறவினர்கள் கலக்கம்... ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..?

ஜெயிலில் இருந்தாலும் அன்கிருந்தே வரவு, செலவு கணக்கை பார்த்து வருகிறார் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருக்கிறார். மதுபான ஆலை, தேயிலை தோட்டம், டிவி சேனல், தியேட்டர் என சசிகலா உறவினர்கள், பல தொழில்கள்ல ஈடுபட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் சசிகலா ஆசியால் தொடங்கப்பட்டவை.

இதனால் அவரவர் வரவு, செலவு விபரங்களை ஜெயிலில் இருக்கிற சசிகலாவிடம், அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள். அதில் சில கணக்குகளை மறைக்க, யாராவது முயற்சி செய்தால் அடுத்த முறை வருகிறபோது அந்த கணக்கு வேண்டும் என கறாராக உத்தரவு போடுகிறார் சசிகலா. கணக்கு வழக்கு சரியாக இருந்தால் அவர் ஏன் ஜெயிலுக்குள் போய் இருக்கணும்? 

karuppan Mon, 09/23/2019 - 08:25
சசிகலா sasikala TTV Dhinakaran சசிகலா அரசியல்

English Title

Relatives of Sasikala ... Do you see the work done in jail?

News Order

0

Ticker

1 டி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..!

டி.டி.வி.தினகரன்  திட்டமிட்டபடியே பழி வாங்கிட்டார். தன்னை பற்றி சசிகலாவிடம் போட்டு கொடுத்து ஜெயில் பக்கமே வர விடாமல் தடுத்தது. சசிகலாவின்  பணத்தை சுருட்டியது. அவரது மனைவி அனுராதா செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் ‘லைவ்’வாக அப்படியே சசிகலாவுக்கு சென்றுள்ளது.

ttv dinakaran

அவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் தன் சொத்துகளுக்கு தான் சிறையில் இருந்து வெளியே வரும் வரை ஒருவரை கார்டியனாக போடவும், அவற்றை பாதுகாக்கவும் முடிவு செய்துள்ளார் சசிகலா. அதற்கான பணிகள் சிறை துறை வளாகத்திலேயே நடக்க இருக்கிறது.

pukazhenthi

 இதை உறுதிபடுத்தும் வகையில் சசிகலாவின் தம்பி திவாகரன் தினகரனை கடுமையாக தாக்கி பேசியதோடு, சசிகலா விடுதலையாவதை தடுக்கும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டு இருப்பதாக பெரிய குண்டை போட்டுள்ளார். ttv dhinakaran

இதையெல்லாம் அறிந்து கொண்டே புகழேந்தி தன்னை கட்சியில் இருந்து நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன் என தில்லாகக் கூறி வருகிறார். 

karuppan Tue, 09/17/2019 - 08:17
TTV Dhinakaran sasikala diwakaran சசிகலா அரசியல்

English Title

The green betrayal committed by ttv dhinakaran

News Order

0

Ticker

1 புகழேந்தியை ஓரங்கட்டிய தினகரன் : கட்சி தாவலுக்கு தயார் என தகவல்!


அமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர்  இடம்பெறவில்லை.

கோவையில்  அமமுக நிர்வாகியான  புகழேந்தி தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளுடன், 'போகும் அல்லது இருக்கும் இடத்தில் முகாந்திரம் இருக்க வேண்டும். இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என்று பேசும் படியாக அந்த வீடியோ இருந்தது.  இதனால் புகழேந்தி அமமுகவிலிருந்து விலக இருப்பதாகத் தகவல் வெளியானது. இதை புகழேந்தி மறுத்தார். 

pugazhenthi

இதையடுத்து  புகழேந்தி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், புகழேந்தி பேசியதை யாரும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

 

இந்நிலையில் அமமுக செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றி வேல், முன்னாள் அமைச்சர் வெற்றிவேல் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பெயர்கள்  இடம்பெற்றுள்ளது. 

ஆனால் அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலம் புகழேந்தி விரைவில் கட்சியிலிருந்து வெளியேறலாம்  என்று கூறப்படுகிறது.
 

manikkodimohan Mon, 09/16/2019 - 13:57
ammk TTV Dhinakaran Pugazhendhi புகழேந்தி-டிடிவி அரசியல் தமிழகம்

English Title

ammk spoke persons list released pugazhendhi name was missing

News Order

0

Ticker

0 
எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன்

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்., லிஸ்டில் இணைந்த டி.டி.வி.தினகரன்... குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்..!

மாறி மாறி அறிக்கை விட்டு இருகட்சிகளும் தவித்து வருகின்றன. ஆகையால், அதிமுகவுக்கு ஒரு பக்க மத்தாளம் என்றால் திமுகவுக்கு இரு புறமும் மத்தாளம்..!

செந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்... சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..?

சசிகலா வெளியில் வருவதற்குள் அதிமுகவை முழுதாக  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரத்தான் டி.டி.வி.தினகரன்  ரகசிய திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் நடந்து வரும் காட்சிகளோ வேறு. 

Thanga thamizh selvan senthil balaji

அவர் ஆரம்பித்த அமமுக கிட்டத்தட்ட காலியாகி விட்டது. காமெடி நடிகர்களுக்கு எல்லாம் பதவிகளை வாரி வழங்கி வரும் டி.டி.வி.தினகரன் கட்சியின் தொண்டர்கள், செல்வாக்கு உள்ள நபர்களை கழட்டி விடும் வேலையை இப்போது பார்த்து வருகிறார்.

குறிப்பாக சசிகலாவின் பெயரை சொன்னாலே சீறி  விழுகிறார். இனி அவங்க சிறையில் இருந்து வெளியே வந்து கட்சியை நடத்துவதெல்லாம் முடியாத கதை என்று டி.டி.வி.தினகரனின் அடிப்பொடிகள் சொன்னதை கேட்டுதான் இந்த ஆட்டம் என்கிறார்கள். பிறகு தனது மனைவியின் பேச்சை கேட்டும் பணத்தை பல  இடங்களில் முதலீடு செய்துள்ள பணம், பினாமிகளிடம் உள்ள பணம், பினாமி சொத்துகளை விற்றும் அது தன் கைக்கு முழுமையாக கைக்கு வந்ததும் டி.டி.வி.தினகரன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெறலாம் என்கிறார்கள் அவரின்  அடிப்பொடிகள். 

ttv dinakaran sasikala

நமக்கு அரசியல் சரிப்படாது. பணம் நிறைய செலவழிக்கணும். அதை சசிகலாவே செய்து கொள்ளட்டும் நாம ஒதுங்கிடலாம். அதிமுகவும் கைக்கு வரவில்லை. அமமுகவும் அழிந்து விட்டது எனவே,  நாம வழக்கம்போல் பாண்டிச்சேரிக்குசேரிக்கு போய் செட்டிலாகி விடலாம் என்று திட்டத்தில் இருக்கிறாராம்.  சரி தனது சித்தி சசிகலாவின் மீது டி.டி.வி.தினகரனுக்கு என்ன கோபம்..?

சொத்துக்களையும், ஜெயா டிவி நிர்வாகத்தையும் இளவரசியின் மகன் விவேக் வசம் ஒப்படைத்ததை டி.டி.வி.தினகரனும்  அவரது மனைவியும் துளி கூட விரும்பவில்லை. அது சசிகலா மீது வெறுப்படையச் செய்து விட்டது. மீண்டு வந்து சசிகலா அரசியல் செய்தாலும் தனக்கு எந்த லாபமும் இருக்காது. மீண்டும் விவேக் தான் அத்தனையும் அனுபவிக்கப்போகிறார் என நினைக்கிறாராம் டி.டி.வி. 

இந்த விஷயங்களை நம்மிடம் கூறிய அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், கலைராஜன், தங்க தமிழ்செல்வன்,  இசக்கி சுப்பையா, இப்போது புகழேந்தி ஆகியோர் மாற்றுக் கட்சியில் சேர்வதற்கு காரணமே டி.டி.வி.தினகரன் தான். அவர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரனுக்கு மிக நெருக்கமானர்கள். தீவிரவிசுவாசிகள்.  அவர்களது எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு தங்களுக்குள் பிரச்னை என்பதைப்போல் காட்டிக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். 

தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோவை அவர்கள் வெளியிட்டு தான் வெளியேற்றினார்கள். அதேபோல் புகழேந்தியின் வீடியோவை தங்கள் கட்சிக்குள்ளேயே கமுக்கமாக வைத்திருக்கலாம். அதை வெளியிட்டு அவரை வெளியேற்றி மாற்றுக் கட்சிக்கு அனுப்ப வைக்கும் நோக்கிலேயே அந்த வீடியோவை வெளியிட்டார்கள்.  அதேபோல் கட்சியை விட்டு நீக்கும் போது மட்டும் தான் அவர்கள் டி.டி.வி.தினகரனை விமர்சித்தார்கள். அடுத்து டி.டி.வி.தினகரன் பற்றி வாயை திறப்பதே இல்லை என்பதையும்  கவனிக்க வேண்டும்’’ என்கிறார்கள்.

admin Sat, 09/14/2019 - 09:20
TTV Dhinakaran sasikala senthil balaji TTV Dhinakaran dmk ttv-sasikala அரசியல் தமிழகம்

English Title

ttv dinakaran make senthil balaji and thanga thamizh selvan them to join dmk

News Order

0

Ticker

1 என்னவெல்லாம் நடந்தது தெரியுமா..? டி.டி.வி.தினகரன் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் புகழேந்தி..!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரன், அதிமுக அமைச்சர்கள் முதல் இப்போது வரை நடந்தவற்றை அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.  sasikala

இது குறித்து அவர் கூறுகையில், ‘’ 2017ஆம் ஆண்டு ஏப்ரல் சமயத்தில் டி.டி.வி.தினகரனை அமைச்சர்கள் சந்தித்தனர். அதன்பிறகு அமைச்சர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கச் சொல்லுவதாகக் கூறி தான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்றும் டி.டி.வி.தினகரன் அறிவித்துவிட்டார். நான் ஃபிளைட்டை பிடித்து டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு உடனடியாகச் சென்றேன். அவரிடம், ‘அரசியலில் இருந்து விலகினால் நன்றாக இருக்காது. உங்களுடைய தலைமையை ஏற்றுதான் அனைவரும் வந்து நிற்கிறோம். தயவு செய்து உங்களுடைய முடிவை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு கடவுள் ஒருநாள் வழிவிட்டால் வருகிறேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நானோ பிடிவாதமாக, நீங்கள் இங்குதான் இருக்க வேண்டும், எங்களை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.Sasikala

அதற்கு முன்பு பல வருடங்கள் அரசியலில் இல்லை. சின்னம்மா சொல்லித்தான் அவர் அரசியலுக்குள் வருகிறார். இதனைத்தான் அந்த வீடியோவிலேயே சொன்னேன். பல வருடங்களாக அரசியலில் இல்லாத டி.டி.வி.தினகரனை, அரசியலுக்கு அழைத்து வந்ததில் நான் முக்கியமான இடத்தைப் பெறுகிறேன் என்றுதான் நான் சொன்னேன். அது அவருக்கே தெரியும். இதில் என்ன தவறு நடந்துவிட்டது. நான் அரசியலிதான் இருந்தேன், புகழேந்தி பொய் சொல்கிறார் என்று டி.டி.வி.தினகரனால் சொல்ல முடியுமா?

தலைவரை அரசியலுக்கு அழைத்து வந்தீர்கள். ஆனால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் வரவில்லையே என்று கட்சிக்காரர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். எனக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடைபெறவில்லை. எனக்கே இந்த நிலைதான். உங்களுக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று கூறினேன். இதில் எங்கே எடுக்க வேண்டுமோ அதனை எடுத்துவிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். திட்டமிட்ட சதியாகத்தான் இது உள்ளது. எதற்காக இப்படி செய்ய வேண்டும். எஞ்சியிருப்பதே நான் ஒருவன் மட்டும்தான். என்னையும் இழந்து இந்த கட்சி என்ன செய்யும்.

அமமுக நான் கண்ட இயக்கம். இந்த இயக்கத்திலிருந்து என்னை வெளியேறச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை டி.டி.வி.தினகரன் வெளியேறு என்று சொல்லமாட்டார். அமமுகவின் அங்கம் நான் என்ற நம்பிக்கையுடன் இந்த இயக்கத்தில் உள்ளேன். என்னை வெளியில் அனுப்ப வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்காது என நினைக்கிறேன். என்னை இழந்தால் கட்சிக்கு இழப்பு என்பது அவருக்கும் தெரியும். ஆகவே காலம் பதில் சொல்லும்.pukazhenthi

ஒரே நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் 8 பேரை நீக்குவதாக அம்மா முடிவெடுத்துவிட்டால் அன்று அவருக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம். பூங்குன்றனிடம் மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்கள் குறித்த பட்டியல் கேட்பார். அவர் ஒரு 10 பேரின் பெயரைச் சொன்னால், அவர்கள் குறித்து தலைமை கழகத்திலிருந்தோ, அமைச்சர்கள் மூலமாகவோ விசாரிக்கச் சொல்வார். யார் மீது தவறு உள்ளதோ அவரை நீக்கச் சொல்லிவிடுவார். இதுதான் நிர்வாகம். இதனை டி.டி.வி.தினகரன் செய்யமாட்டேன் என்கிறாரே. அனுபவமில்லாத பழனியப்பன் எல்லாத்துக்கும் ஆம் என்று சொல்லக்கூடிய சிலர். இதுதான் என்னுடைய குமுறல். இதனை வெளியில் சொல்லக்கூடிய நிர்பந்தம் தற்போது ஏற்பட்டிருக்கிறது’’ எனத் தெரிவித்தார். 
 

karuppan Thu, 09/12/2019 - 08:55
TTV Dhinakaran sasikala Pukazhenthi டி.டி.வி.தினகரன் அரசியல்

English Title

TTV Dhinakaran is a pugazhenthi who pushes secrets

News Order

0

Ticker

1
சசிகலா

புகழேந்தி எடுத்த பகீர் முடிவு... டி.டி.வி.தினகரனால் நடுத்தெருவுக்கு வரப்போகும் சசிகலா குடும்பம்..!

தி.மு.க.,வில் சேர்க்க தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், புகழேந்திக்கு கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்யவே விரும்புகிறார்.

டி.டி.வி.தினகரன்

நாலு சுவத்துக்குள்ள நடந்ததை வீடியோ எடுத்து அசிங்கப்படுத்துறாங்க... டி.டி.வி.தினகரன் மீது பகீர் குற்றச்சாட்டு..!

அமமுகவில் தன்னை அசிங்கப்படுத்த கட்சியின் ஐடி.விங் செயல்படுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


வேலூர்

அதிமுகவுக்கு தலைவலி... வேலூரை பிரித்ததில் சிக்கல்..!

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது அரசியல்வட்டாரத்தில் இனிப்பு, கசப்பு கலந்த கலவையை ஏற்படுத்தி உள்ளது.


சசிகலா

சசிகலா போட்ட கட்டளை... எடப்பாடி நிம்மதி... பொங்கியெழும் டி.டி.வி.தினகரன்..!

யாரையும் நேரடியாக சுட்டிகாட்டி விரோதத்தை சம்பாதித்து நீயும் சிறைக்கு சென்றுவிடாதே என்று டி.டி.வி.தினகரனுக்கு தனக்கு வேண்டியவர்கள் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்கள்.


TTV Dhinakaran

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்து கொள்ளலாம் - டிடிவி தினகரன்

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை போலீசார் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார். 

 
எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸுடன் ஓரம் கட்டப்படும் டி.டி.வி.தினகரன்- சசிகலாவுடன் டீல் போட்ட எடப்பாடி..!

டி.டி.வி. தினகரனின் அண்மைக்கால செயல்பாடுகளில் மிகுந்த அதிருப்தியடைந்திருக்கும் சசியும் எடப்பாடி தரப்பின் கோரிக்கைக்கு ஒகே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.சசிகலா

கழற்றி விடப்படும் டி.டி.வி... சசிகலா தலைமைக்கு ஓ.பி.எஸ்- எடப்பாடி சம்மதம்... பச்சை கொடி காட்டிய பா.ஜ.க..!

சசிகலா இத்தனை நாள் சிறைதண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவர் மீது இயல்பாக சிறு பரிதாபம் கொண்டிருக்கும் பி.ஜே.பி., அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் யோசனைக்கும் வந்துவிட்டதாம்.


தங்க தமிழ்செல்வன்

டி.டி.வி.தினகரனின் ரூ.2 கோடியை ஆட்டையை போட்ட தங்க. தமிழ்செல்வன்..? துரத்தி துரத்தி வெளுக்கும் ஆதரவாளர்கள்..!

என்னிடம் எதற்காக, எவ்வளவு பணத்தை, எங்கே வைத்து தினகரன் கொடுத்தார் என்று ஆதாரத்தோடு சொல்லுங்கள். நான் அதற்கு ஆதாரத்துடன் கணக்கு சொல்கிறேன்.

2018 TopTamilNews. All rights reserved.