• August
    21
    Wednesday

Main Area

Main



மீண்டும் காதலில் விழுந்த திரிஷா? யாரு அந்த காதலர் தெரியுமா? 

நடிகை திரிஷா
நடிகை திரிஷா
Loading...

சென்னை: நடிகை திரிஷா மறுபடியும் யாரையோ காதலிக்கிறார் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை திரிஷா. கிட்ட தட்ட 15 வருடங்களாக  மேலாக தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான 96 படத்தில் ஜானு கதாபாத்திரம் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது இவர் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

trisha

இவர் பல முறை காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். அது மட்டுமின்றி பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் சில பல காரணங்களால் இவர்களது காதல் தோல்விலயில் முடிந்தது. 

இந்த நிலையில் திரிஷா தனது சமூக வலைத்தளபக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?’ என்று கேள்வி கேட்க, அதற்கு  பதிலளித்த திரிஷா, ‘சிங்கிள் பட் டேக்கன்’ என கூறியுள்ளார். 

இதனையடுத்து திரிஷா காதலில் விழுந்துள்ளது உறுதியாகியுள்ளதாக செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திரிஷா, 'Do it when it's a want and not a need” என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் தொடர்ந்து அந்த நபர் யாரு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.