• August
    24
    Saturday

Main Area

Main



பிரதமர் இருக்கும் மேடையில் பெண் அமைச்சரிடம் அசிங்கமாக நடந்துகொண்ட பாஜக அமைச்சர் - வீடியோ

tripura
tripura
Loading...

அகர்தலா: பிரதமர் மோடி இருக்கும் மேடையில், திரிபுரா அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரின் பின்புறம் கை வைக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகர்தலாவில் நடந்த பாஜக பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது திரிபுரா அமைச்சர் மனோஜ் கன்டி, அமைச்சர் சந்தனா ஜக்மாவின் பின்புறம் கை வைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக நலம மற்றும் கல்வித்துறை அமைச்சராக செயலாற்றி வரும் சந்தனா ஜக்மா பழங்குடி தலைவர் ஆவார். 

மனோஜ் கன்டியின் அருவருப்பான செயலுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என லெப்ட் ப்ரண்ட் அமைப்பாளர் பிஜன் தார் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நபெந்து பட்டாச்சாரி, அந்த பெண் அமைச்சரே புகார் ஏதும் கொடுக்காத போது, இடதுசாரிகள் இதை வைத்து ஏன் அரசியல் செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

source: Indiatoday
2018 TopTamilNews. All rights reserved.