• August
    24
    Saturday

Main Area

இடது கைப்பழக்கம் கொண்டவர்களிடம் இருக்கும் சுவாரசியம்!

மனித மூளை அமைப்பில், பெருமூளையில் இருக்கும் வலதுபக்க‌ மூளை, உடலின் இடப்புறத்தையும், இடது பக்க மூளை, உடலின் வலதுபக்கத்தையும் இயக்கும், கட்டுப்படுத்தும். வலப்பக்க மூளை அதிகமாக செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது. இடது கை பழக்கம் குறைபாடோ, நோயோ அல்ல என்ற‌ விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 13ம் தேதி 'உலக இடது கை பழக்க தினமாக' கொண்டாடப்படுகிறது. இடது கை பழக்கம் உடையவர்களுக்கென சில பொருட்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, கத்திரிகோல்.

Left handed

வலது கை பழக்கம் உடையவர்களால் எந்த வேலையையும் இடது கையை பயன்படுத்தி சுலபமாக செய்துவிட முடியாது. ஆனால், இடது கை பழக்கம் உடையவர்கள், வலது கையை பயன்படுத்தியும் எந்த வேலையையும் செய்வார்கள். அத்துடன், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பன்முகத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். கங்குலி, சுரேஷ் ரெய்னா போன்ற கிரிக்கெட் வீரர்கள் இடது கையால் பேட்டிங் செய்து, வலதுகையால் பந்துவீசுவதை பார்த்திருப்பீர்கள்தானே? மேலும், நுண்ணிய வேலைப்பாடுகளை செய்வதில் இடது கை பழக்கம் உடையவர்கள் சிறந்து விளங்குவார்கள். கவனித்துப் பார்த்தால், இடது கை பழக்கம் கொண்ட பெரும்பாலானோருக்கு கையெழுத்து மிக அழகாக இருப்பது தெரியவரும்.

gunaseelan Fri, 07/05/2019 - 17:28
World Left handed's day Multi tasking left handeds Uniqueness of left handed Left handed Obama லைப்ஸ்டைல் வழிகாட்டி

English Title

Uniqueness of Left handers

News Order

0

Ticker

1 இதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்!

இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கு பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் நிறையவே குழப்பமாக இருக்கிறார்கள்.நமது வீட்டில் இருக்கும்போது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அதிலும் உடன் இருப்பவர்கள் மனம் நோகாமல் இருக்கவேண்டியதும் ரொம்ப முக்கியம்.

நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வெளியிடங்களில் நாம் நடந்துகொள்ளும் முறை மற்றவர்களை முகம் சுழிக்கும் படியாக இருக்கக்கூடாது.அப்படி செய்யக்கூடியதும், செய்யக்கூடாததுமாக இந்தமுறை ஐந்து பாய்ண்டுகளைப் பார்க்கலாம்...

call

1.நீங்கள் ஃபோன் செய்தவுடன் ஒருவர் எடுக்கவில்லை என்றால்,மீண்டும்,மீண்டும் அழைக்காதீர்கள்.நீங்கள் ஒருவரை அழைத்தவுடன் ஃபோனை எடுக்க வேண்டும் என்று நினைத்தால்,அவர் டெலிபோன் ஆப்பரேட்டராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.நீங்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்தாலும் நீங்கள் அழைக்கும் நபர் டிராவல் செய்து கொண்டிருந்தாலும் உடனடியாக ஃபோனை எடுத்து பதில் சொல்ல முடியாது.அவர்கள் உங்களோடு பேசுவதை விட ஏதோ முக்கியமான வேலையில் இருக்கலாம்.அதனால்,அவர்களாக திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள்.மிக அவசரமான தகவலை சொல்லணும் என்றால் வாட்ஸ்அப்பில் செய்தி தட்டிவிடுங்கள்.அவர்கள் உங்கள் செய்தியை பார்த்ததும் அழைப்பார்.

dsvsv

2.ஒருவர் எதையாவது தவறி கீழே போட்டுவிட்டாலோ,ஸ்பூனால் சாப்பிட தடுமாறினாலோ அவர்களை உற்றுப் பார்க்காதீர்கள்.இது தும்மும்போதும் இருமும்போதும்,அபானவாயுவை வெளிப்படுத்தும் போதும் அவர்களை கவனிக்காதது போல இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.இதுபோல் ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்து ஒட்டுமொத்த ஜனமும் உங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் உங்களது மனநிலை எப்படி இருக்கும்? அதுபோல்தான் மற்றவர்களும்.

afsdf

3.எதிர்பாராத விதமாக திடீரென்று ரொம்ப நாள் பார்க்காமல் இருந்த நண்பரை சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் சந்திக்கும் நேரத்தைப் பொறுத்து லஞ்சுக்கோ, டின்னருக்கோ அழைக்கிறார்.தவிர்க்க முடியாமல் நீங்களும் போக வேண்டிய சூழல் இருந்தால்,விலையுயர்ந்த உணவு வகைகளை ஆர்டர் செய்யாதீர்கள்.அவர்களோட சூழ்நிலை என்னவென்று உங்களுக்கு தெரியாது. அவர்களையே உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யச் சொல்வது இன்னும் சிறப்பு.

xvffdd

4.அடிக்கடி நண்பர்களோடு,ஆட்டோவிலோ டாக்ஸியிலோ போக வேண்டிய  சூழல் எல்லோருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதுதான்.அதுபோல் ஹோட்டல், பார்ட்டி என்று போகும்போதும் சரி,அவர்கள் ஒரு முறை பில் கொடுத்தால், அடுத்தமுறை நீங்கள் பில் கொடுப்பதற்கு மறக்க வேண்டாம்.உங்களால் கொடுக்க முடியாத சூழல் இருந்தால்,நீங்கள் அந்த மாதிரியான பயணத்தையே தவிர்த்திடுங்கள்.நண்பர்கள் மத்தியில் மட்டுமல்ல நண்பருடன் வரும்,அறிமுகம் இல்லாத நபர்களிடமும் உங்கள் மீது மரியாதை ஏற்படும்.

dfs

5.நண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உடனிருப்பவர்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்பது தெரிந்தால், உடனடியாக வேறு டாப்பிக்கை மாத்துங்கள்.முடிந்தவரை எல்லோருக்கும் பொதுவான உரையாடலாக இருந்தால் நல்லது.அதைவிட முக்கியம்,நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது யாரவது கருத்து சொன்னால்,அதை கவனமாக காது கொடுத்து கேளுங்கள்.எதிரில் இருப்பவர்களுக்கும் பேச வாய்ப்பு கொடுக்கணும் என்பதை மறக்காதீர்கள்.இல்லையென்றால் மறுபடியும் அப்படியொரு சந்திப்பு நடக்காமல் போவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

Arunpandiyan Fri, 04/12/2019 - 13:50
life style habit behaviour friends and relatives ப்ரண்ட்ஸ் - பேமிலி லைப்ஸ்டைல் உறவுகள் வழிகாட்டி

English Title

How to act infront of friend and neughbours

News Order

0

Ticker

0 போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மார்க் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிபெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பிரதான தேர்வில் 50 மதிப்பெண் எடுக்க வேண்டிய நிலையில், 47 மட்டுமே எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர் நெல்சனை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவும், விடைத் தாளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதில், மாணவருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதி மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறை பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

smprabu Fri, 02/01/2019 - 21:30
IIT Negative Marks High court Competitive exam highcourt லைப்ஸ்டைல் வழிகாட்டி

English Title

No Negative marks in competitive exams: Chennai High Court

News Order

0 சூப்பரு!... தமிழ்நாடு அஞ்சல் மண்டலத்தில் போஸ்ட்மேன், மெயில் கார்டு, வேலைவாய்ப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

சென்னை: தமிழ்நாடு அஞ்சல்துறை மண்டலத்தில் போஸ்ட்மென் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது என இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.

பணியின் பெயர்: கிராம தக் சேவக் (போஸ்ட்மேன்)

வேலை பிரிவு: மத்திய அரசுப்பணி

பணியிடம்: தமிழ்நாடு

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: www.tamilnadupost.nic.in

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி அல்லது பத்தாம் வகுப்பு 

வயது வரம்பு: 18  முதல் 40 வயது வரை

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - ரூ.100

எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கட்டணம் இல்லை.

சம்பளம்: ரூ.21700 - ரூ.69,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

www.tamilnadupost.nic.in அல்லது appost.in/gdsonline/Home.aspx

ஆகிய இணைய முகவரியில் Tamilnadu Post office GDS Recruitment 2019 Apply Online link என சர்ச் செய்து லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் தேவைப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

படிவத்தை பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடுபோஸ்ட் டாட் நிக் டாட் இன் என்ற இந்த தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

smprabu Fri, 02/01/2019 - 17:19
job offer tamilnadu postal department postman Employment india post postal லைப்ஸ்டைல் வழிகாட்டி

English Title

Employment job offer in Tamilnadu Postal department

News Order

0 
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள்!

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

tnpsc

மொத்த காலியிடங்கள்: 60

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:Assistant System Engineer

காலியிடங்கள்: 36

பணி: Assistant System Analyst

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,000

தகுதி: பொறியியல் துறையில் computer sciene and engineering, computer engineering, information technology, electronics and communication engineering, electrical and electronincs engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பிடெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  பிசி, எம்பிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பதிவுக்கட்டணம்: ரூ.150. ஏற்கெனவே ஒரு முறை பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்தத் தேவையில்லை. தேர்வுக்கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது.

கட்டணங்கள் வங்கியின் அட்டைகளை பயன்படுத்தியும், ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். கட்டண சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 22.02.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019

மேலும் முழுமையான விவரங்களை அறிய 

http://www.tnpsc.gov.in/Notifications/2019_Notifyn_Assistant_System_Engineer_Analyst.Pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
ஆல் தி பெஸ்ட்!


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2019

manikkodimohan Wed, 01/30/2019 - 13:12
TNPSC life style job vacancy tnpsc லைப்ஸ்டைல் வழிகாட்டி

English Title

tnpsc

News Order

0 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 24வரை தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 2019-ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் ஜனவரி 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்துக்கு நாளை 23ம் தேதி, மறுநாள் 24ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.

அதேவேலையில் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள்(ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

vikrammuthu Tue, 01/22/2019 - 12:16
10th exam school students tatkal admission tatkal லைப்ஸ்டைல் வழிகாட்டி

English Title

10th exam tatkal admission

News Order

0 சிறந்த வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்கள் சிந்தனைக்காக!!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த வெற்றியாளர்கள், தலைவர்களின் பொன்மொழிகள் எப்போதுமே நம் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பயன்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

billgates

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்: உலகில் வேறு யாருடனும் உங்களை ஒப்பிடக்கூடாது. அப்படிச் செய்வீர்களானால் அது உங்களையே நீங்கள் அவமதிப்பது போன்றாகும்.

stevejobs

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்: தொழிலில் வெற்றியடைந்த பாதிப்பேரை வெற்றியடையாத மீதம் பேரிடமிருந்து பிரித்து வைப்பது அவர்களது விடாமுயற்சியே காரணமாகும்.

markzuckerberg

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்: நான் தினசரி எனக்குள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி 'என்னால் மிக முக்கியமாகச் செய்யவேண்டிய காரியத்தைதான் இப்போது செய்கிறேனா?'

larrypage

கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ்: எதிர்பார்ப்பை விட அதிகமாக செய்து காட்ட வேண்டும்.

sergybrin

கூகுள் இணை நிறுவனர் செர்கெய் பிரின்: சிறிய பிரச்னைகளை தீர்ப்பதைக் கட்டிலும் பெரிய பெரிய பிரச்னைகளை தீர்ப்பது மிக எளிது.

jkrowling

எழுத்தாளர், திரைக்கதை வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் ஜே.கே.ரௌலிங்: இந்தப் பெண்ணிடம் உள்ள திறனைக் கொண்டு இவளால் சிறப்பான படைப்பைத் தர முடிந்தது என்று என்னைப் பற்றி எல்லாரும் நினைவுகூர வேண்டும்.

richardbranson

விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்டு பிரான்ஸன்: தொழில் வாய்ப்புகள் என்பது பேருந்துகள் போல; எப்போதும் அடுத்து ஒன்று வந்து கொண்டேயிருக்கும்.

jeffbezos

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஜோஸ்: சிறந்த அனுபவங்களை அதிகரித்துக் கொண்டே நாம் சென்றால், அதை நமது வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் சொல்வார்கள். வாய் வார்த்தைகள் எப்போதும் வலிமையானவை.

தொழிலதிபர், ஊடகவியலாளர், அரசியல் ஆலோசகர் ஆலன் ஷுகர்: ஒரு சிறந்த தலைவர் என்பது அவரது தொழிலில் முன்னோடி என்று பெயர் பெற வேண்டிய அவசியமில்லை; தெளிவான சிந்தனையுடன் தொலைநோக்கோடு சிறப்பாக செயல்படுபவர்கள் தான் நினைவில் நிற்பார்கள்.

oprahwinfrey

மீடியா பிரபலம், நடிகை, கல்வியாளர் ஓபரா வின்ஃபிரை: எனக்கு தோல்விமீது நம்பிக்கை கிடையாது. அதை நடந்த விதத்தை உணர்ந்து கொள்வோமானால் தோல்வி என்பதே இல்லை.

jamestyson

டைசன் கம்பெனி நிறுவனர் ஜேம்ஸ் டைசன்: சில நேரங்களில் அழுத்தம் காரணமாக தோற்றுபோனது போல உணர்ந்து எல்லாவற்றையும் கைவிடலாம் எனத் தோன்றும்போது முன்னிலும் முனைப்பாக செயலாற்ற வேண்டும் என உத்வேகத்துடன் பணியைத் தொடர்ந்தோமானால் அந்த எண்ணத்திலிலுந்து விடுபட்டுவிடலாம் என்பதே எனது அனுபவப் பாடமாகும்.

jackdorsey

டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்ஸி: எந்த ஒரு விஷயத்திலும் துல்லியத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். சிறப்பாகச் செயல்படுவதற்கு அந்த விஷயங்களை குறிப்பிட்ட அளவுக்கு வரையறைத்துக் கொள்ள வேண்டும்.

ariannahuffington

தி ஹஃப்பிங்டன் போஸ்ட் இணை நிறுவனர் ஏரியானா ஹஃப்பிங்டன்: பயந்து போனாலும் உங்கள் கனவு விஷயங்களை சாதிக்கும் வகையில் எப்போதும் செயல்படவேண்டும்.

sethmacfarlane

நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசைக்கலைஞர் சேத் மாக்ஃபார்லேன்: நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி; சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறலாம், சில நேரங்களில் அது முடியாமலும் போகலாம்.

fiance

நடிகை, திரையிசை பாடலாசிரியர் மற்றும் பாடகி பியான்ஸ்: ஒருவித பதற்றத்துடன் வேலை செய்வது என்பதுகூட ஆரோக்கியமான விஷயம்தான்- எந்தச் செயலையும் கடுமையான உழைப்புடனும் அது வெற்றிகரமாக இருக்க வேண்டும் என நீங்கள் கருதுவதால் ஏற்படக்கூடிய பதற்றமாக இருக்கக்கூடும்.

smprabu Mon, 01/21/2019 - 13:50
Quotes entrepreneurs success quotes jkrowling லைப்ஸ்டைல் வழிகாட்டி

English Title

Quotes from successful entrepreneurs

News Order

0 வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கிய தேவை பாஸ்போர்ட். வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் பாஸ்போர்ட்டின் தேவை அத்யாவசியப்படுகிறது. ஆனால், எதிர்பாரா விதமாக உங்களது பாஸ்போர்ட் வெளிநாட்டில் தொலைந்து போனால் என்ன செய்வது கவலை வேண்டாம். நிதானமாக நீங்கள் செய்ய வேண்டியவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உள்ளன.

passport

பெரும்பாலான வெளிநாட்டு ஹோட்டல்களில் நீங்கள் தங்குவதற்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட் தொலைந்து போனால், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்து அதற்கு உண்டான நகலையும், போலீசார் அளிக்கும் ஒப்புகை சீட்டையும் உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். புகார் அளிக்கும் போது, உங்களது பாஸ்போர்ட் எங்கு காணாமல் போனது என்ற விவரத்தையும் அதில் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, போலீசாரின் வழிகாட்டுதல்படி, அந்நாட்டில் உள்ள தூதரகத்தை நாம் அணுகலாம்.

பெரும்பாலான தூதரகங்கள் பொதுவான வேலைநேரத்தை கொண்டிருக்கும். தூதரக அதிகாரியிடம் புகார் அளிக்கும் போது, அந்நாட்டை விட்டு எப்போது நீங்கள் கிளம்புகிறீர்கள் என கூறுங்கள். பெரும்பாலும், 24 மணி நேரத்தில் உங்களுக்கு மாற்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.

passport1

மாற்று பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் போது, உங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, விமான டிக்கெட், காவல்நிலையத்தில் நீங்கள் அளித்த புகார் குறித்த தகவல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுக்க வேண்டும். உங்களிடம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லையெனில், தூதரக அதிகாரியிடம் புகைப்படம் எடுக்க உதவுமாறு கோரலாம்.

மாற்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களது பழைய பாஸ்போர்ட்டுக்கான நகல் உங்களிடம் கேட்கப்பட மாட்டது. எனினும், உங்களது பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வழங்கப்படத் தேதி, காலாவதியாகும் தேதி, வழங்கப்பட்ட இடம் கேட்கப்படும். எனவே, இந்த தகவல்களை உங்களது -மெயில், செல்போன் உள்ளிட்டவற்றில் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலகட்டங்களில் இது உங்களுக்கு உதவும்.

உங்களது பாஸ்போர்ட் எதிர்பாரா விதமாக தொலைந்து விட்டால், அந்நாட்டில் நீங்கள் கூடுதலாக இருக்க நேரிடும். எனவே, நீங்கள் ரிடர்ன் டிக்கெட் புக் செய்திருந்தால், எந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளீர்களோ, அந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிதடு விடுங்கள். உங்களது குழப்பங்களும் தீரும், ஒருவேளை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், உங்களது டிக்கெட்டை ரத்து செய்யாமலேயே வேறு தேதிக்கு அது மாற்றித் தரப்படும்.

manikkodimohan Sat, 12/15/2018 - 16:50
passport lose your passport in Abroad life style passport வழிகாட்டி

English Title

Tips to remember if you lose your passport in Abroad

News Order

4
2018 TopTamilNews. All rights reserved.