• October
    15
    Tuesday

Main Area

Traffic Police
நடுரோட்டில் போலீஸ்காரர் செய்த வேலை... வாகனங்களை நிறுத்தி வாழ்த்து சொன்ன பொதுமக்கள்!

சட்டங்களைப் போடுவதாலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலும் மட்டுமே மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய முடியாது. என்ன தான் சட்டம் கைகளில் இருந்தாலும் கொஞ்சம் அக்கறையும் கூடவே மனிதாபிமானமும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் சென்னை போலீசார். ஹெல்மெட் அணியாதவர்களை நாடு முழுவதும் வளைத்து வளைத்து பைன் போட்டுத் தள்ளும் காவலர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தாலும், நிஜமாகவே மக்களின் காவலர்களாகவும் காலரை உயர்த்தி செல்கிறார்கள் சில கண்ணியமான காவலர்கள்.

traffic police

மழைக்காலம் துவங்கி விட்டதால், சென்னை நகர் முழுக்கவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுத்து மக்களைக் காக்கும் விதமாக அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை சார்பில், நகரின் பல பகுதிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாமை நடத்தி வருகிறது. நேற்று காலை சென்னை மூலக்கடை மேம்பாலத்துக்குக் கீழே அப்படியொரு முகாம் நடந்து கொண்டிருந்தது. லேட்டா போனா அரைநாள் சம்பளம் கட் என்கிற எழுதப்படாத விதியை நொந்துக் கொண்டு, ‘நமக்கெல்லாம் அயர்ன் பாடி... டெங்குவெல்லாம் எட்டிப் பார்க்காது’ என்கிற நம்பிக்கையில் ரோட்டோரம் நடந்துக் கொண்டிருந்த முகாமை யாருமே எட்டிப் பார்க்கவில்லை. 

nilavembhu

சிக்னலில் போக்குவரத்தைச் சரி செய்துக் கொண்டிருந்த மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பொதுமக்கள் எல்லோருமே நிலவேம்பு கஷாயத்தைக் கண்டுக் கொள்ளாமல் செல்வதைக் கவனித்தார். உடனடியாக நூதனமான வழி ஒன்றை முயற்சித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், செல்வராஜ் ஆகியோரோடு ஆலோசித்து, அந்த பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை மடக்கிப் பிடித்து, ஆளுக்கு ஒரு கிளாஸ் நிலவேம்பு கஷாயத்தைக் குடிக்கச் சொல்லி ஃபைன் போட்டார். போலீஸின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு கைமேல் பலன். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களும் அக்கறையாய் அருகே சென்று ஒரு கிளாஸ் கஷாயத்தை உள்ளே தள்ளினார்கள். குடித்து முடித்து போலீசாருக்கு சல்யூட் வைத்து பாராட்டுக்களைத் தெரிவித்தது அத்தனை அழகு!

kumar Tue, 10/15/2019 - 11:51
Traffic Police people போலீசார் தமிழகம்

English Title

people appreciated police in the middle of road

News Order

0

Ticker

0 ஹெல்மெட்டுக்காக தீக்குளிக்க முயன்ற வாலிபர்...! அதிர்ச்சியில் படபடத்த போலீசார்!

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று வரையில் விவாத பொருளாக தான் இருக்கிறது. எதிர்ப்பும், ஆதரவு குரல்களும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி அபராத தொகையை உயர்த்துவதால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்று மத்திய அரசு கூறினாலும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என சில மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

traffic

இந்தியா முழுவதுமே எல்லா மாநிலங்களிலும் இந்த அபராத தொகை உயர்வினால், வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, போலீசாரின் கெடுபிடியினால் நடுரோட்டில் வாலிபர் ஒருவர், அவரது பைக்கை தீ வைத்து கொளுத்தி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பீகாரின் பூர்னியா பகுதியில் சத்யம் சின்ஹா என்பவரை போலீசார் ஹெல்மெட் அணியாததற்காக நிறுத்தி அபராதம் விதித்தனர். அதற்கு முன் தினம் தான் ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் கட்டிய சத்யம், புது ஹெல்மெட் வாங்குவதற்காக தான் சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. போலீசாரிடம் இதைச் சொல்லியும், கண்டுக் கொள்ளாத போலீசார் அபராத ரசீது கொடுப்பதிலேயே தீவிரமாக இருந்துள்ளனர். விரக்தியடைந்த சத்யம், அதே இடத்தில் தனது வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து உடல் மீது தெளித்துக் கொள்ள ஆரம்பித்தார். தற்கொலைக்கு முயல்வதைத் தெரிந்து கொண்டு வெடவெடத்துப் போன போலீசார், அவசர அவசரமாக அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினார்கள்.

kumar Tue, 10/15/2019 - 11:17
Traffic Police helmet Suicide  போலீசார் இந்தியா

English Title

youth attempts to set fire for helmet ... Police in shock

News Order

0

Ticker

0  
ஹெல்மெட்டு

ஹெல்மெட்டுக்கு மட்டும் தான் அபராதமா? கொந்தளிக்கும் பொதுமக்கள்! அதிர்ச்சியில் போலீசார்!

இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதும், சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையாக பன்மடங்கு வசூலிக்கும் நிலைமை ஏற்பட்டது. சாலை...

 
ஹெல்மெட்

இனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் சாமான்ய மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும...


போக்குவரத்து காவலர்கள்

முன்னாள் கவுன்சிலர் மகன் ரகளை! பரிதாபத்தில் போக்குவரத்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, குடிபோதையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து, குடிபோதை ஆசாமியை விடுவித்ததோடு வாகனத்தையும் ம...


ஹெல்மெட் சட்டம்

வாகன சோதனையில் போலீசாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்! எச்சரிக்கை விடுத்த கூடுதல் ஆணையர்

இதோ வருகிறது.. அதோ வருகிறது என்று பயமுறுத்திக் கொண்டிருந்த ஹெல்மெட் சட்டம் தற்போது தீவிரமாக அமுல்படுத்தத் துவங்கிவிட்டது. ஆனாலும், போலீசாரைப் பார்த்ததும், வேறு சந்துப் பொந்துக்களில...


Police

மறையாத மனிதம்! காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய காவலர்!!

காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


 டூவீலர்

இனி டூவீலர் ஓட்டணும்னா ரூ.1000 ரூபாயை கைல வெச்சுக்கோங்க!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை 2015 ஜூலை 1ல் அமலுக்கு வந்தது. எப்போதுமே நல்ல விஷயங்களை ப...

 

போக்குவரத்து

டிராஃபிக் போலீஸிடம் தப்பிவிட்டோம் என்று நினைக்காதீங்க: வீட்டுக்கே தேடி வருகிறது வில்லங்கம்!

சென்னை போக்குவரத்துத் துறை, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அவரவர் வீட்டிற்கே கட்டண இரசீது அனுப்பி வருகிறது 


Police

ஏன்கிட்டயே அபராதம் கேட்கிறீயா? போக்குவரத்து காவலர்களை மிரட்டிய வழக்கறிஞர்! 

சென்னை அண்ணா சதுக்கம் அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர், காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


ஜெய்வந்த்

காவல்துறையை கண் கலங்க வைத்த கட்டுப்பய காளி..!?

நேரம் - காலம், வெயில் - மழை, சொந்தம் - பந்தம், மனைவி - மக்கள்,  விருப்பு - வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் ...


Traffic Police Checking

அப்டியே வண்டியை ஓரம் கட்ட சொன்னால், இனி பயம் வேண்டாம்!

போக்குவரத்து அதிகாரி முன்பாக எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து வைத்திருந்தாலும், அதனை கையோடு எடுத்து செல்லவில்லை என்றால் ஏழரைதான். "சார், லைசென்ஸ் இருக்கு, வீட்டுல மறந்துட்டு வந்துட்டே...


police

ஹெல்மெட் அணியாமல் வந்தால் 10 திருக்குறள் எழுதணும்: டிராஃபிக் போலீசின் நூதன தண்டனை!

இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனை வழங்கி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


tuticorin

தடுக்க முயன்ற போலீசார்: தப்பிக்க முயன்று பேருந்தில் மோதி உயிரிழந்த வாகனஓட்டி! உண்மை நிலவரம் என்ன?

இருசக்கர வாகனத்தில் சென்றவரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது, தனியார் பேருந்து மோதி வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


trafficpolice

இந்தியாவில் முதல் முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி

இந்தியாவில் முதல்முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

2018 TopTamilNews. All rights reserved.