kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

ஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க!

தென்னகத்தின் காஷ்மீர் என்று பெருமைக்குரிய சுற்றுலா தளமாக இருக்கிறது மூணாறு. சுற்றிலும் அழகிய மலைகள், தேயிலை தோட்டங்களின் நடுவில் வெள்ளியை உருக்கி ஊற்றிக் கொண்டிருப்பதைப் போல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டெருமைகள், காட்டு யானைகள் என வனமும், வனப்பும் சூழ்ந்த ரம்யமான பகுதியை கண்டு களிக்க புத்துணர்ச்சி பெறுவதற்காக  இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் மூணாறு வந்து  செல்கின்றனர்.

munnar


அப்படி சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பின் தங்கும் விடுதிகளை தேடிய அலைந்த காலம் போய், தற்போது ஆன்லைனில் விடுதிகளைப் பார்த்து, விலையை விசாரித்து  புக் செய்துவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தான் அதிகம். மூணாறு அருகே குறைந்த விலையில், சொகுசான தங்கும் விடுதிகள் என ஆன்லைனில் பதிவிட்டுள்ளதைப் பார்த்து, அதன் உண்மை தன்மையை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் அறைகளைப் பதிவு செய்து விடுகின்றனர். அப்படி அறையை முன்பதிவு செய்துவிட்டு, மூணாறு வருபவர்கள், விழி பிதுங்கி நிற்கிறார்கள். 

resort


மூணாறுக்கும், தாங்கள் பதிவு செய்துள்ள விடுதிக்கும் சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பது அவர்களை பேரதிர்ச்சிக்கு ஆளக்குகிறது. அழகிய மலைகளையும், இயற்கை எழிலையையும் கண்டுகளிக்க நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மூணாறுக்கு கொஞ்சமும் சம்பந்த்மேயில்லாத ஏதோ ஒரு இடத்தில் அறை எடுத்து தங்கும் அவஸ்தை அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதுடன் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது! இப்படி சுற்றுலா பயணிகளை வலை விரித்து வலைத்தளங்களில் ஏமாற்றும் சொகுசு விடுதிகள், அழகழகான மூணாறின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்டு ஏமாற்றுகின்றன. இந்தப் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்து விட்டு, அந்த விடுதிகளிலேயே தங்குவதற்கு முன்பதிவு செய்து விடுகின்றனர். இதில், வருத்தம் என்னவென்றால் தங்கியிருக்கும் இடமே மூணாறு என நம்பி, ஒரிஜினல் மூணாறை பார்க்காமலேயே பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் சென்ற கதையும் உண்டு. மூணாறு பகுதிக்கு உட்படாத குறிப்பிட்ட பகுதியின் பெயர்களை சிறிய எழுத்திலும், மூணாறை பெரிய எழுத்திலும் பொறித்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் கடைகள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

admin Sat, 09/14/2019 - 12:15
Kerala's Munnar Online hotel booking travel tips online hotel booking லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

becareful while booking online hotels

News Order

0

Ticker

0 
Floods in Kutralam

ஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம்... இல்லையில்லை தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்...


Saravanan

ஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே!

ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வகை மரங்கள், மாங்குயில், மயில், கொண்டாலத்தி, புறாக்கள், மேலும் பாம்பு உள்ளிட்ட வன‌விலங்குகளும் ஆதார் தேவைப்படாமல் ஆனந்தமாய் இவ்வனத்தில் குடியிருக்கின்றன.


Shimla

சாரி மோடிஜி, சிம்லா ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடியாச்சு!

ஐந்தாண்டுகள் முடிவில் "யோவ் அமைச்சரே, எங்கய்யா இங்க இருக்க வேண்டிய சிம்லா ஸ்மார்ட் சிட்டி?" என்று மோடி கேட்டால், "சாரி சார் ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடி ப...


Plastic bottles

நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்!

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், இந்தப் பொருட்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகளும் கொண்டு வரக் கூடாது எ...


பர்மா

பஸ்லயே பர்மா போகலாம் தெரியுமா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷ், பூட்டான், நேப்பாள்,பாக்கிஸ்தான் போற மாதிரியே பர்மாவுக்கும் பஸ்ஸுலயே போகலாம்.சிங்கப்பூர்,மலேஷியாவோட ஒப்பிட்டா காசும் மிச்சம்,விசா ஆன் அரைவல் வசதி இரு...


குன்னூர் சிம்ஸ் பூங்கா

குன்னூரில் கோடை கொண்டாட்டம்: சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் ஆரம்பமான பழக் கண்காட்சி!

61வது பழக்கண்காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 



கோப்புப்படம்

கோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா?!

விடிய விடிய நடக்கும் பார்ட்டிகள், மசாஜ்கள், சுதந்திரமான கலாசாரம் என பல்வேறு நினைவுகள் நமது நினைவுக்கு வந்தாலும், சட்டென முதலில் நமது நினைவுக்கு வருவது குடி...குடி...குடி....தான்


அனகொண்டா பாம்பு

அனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்!  

தேர்தல் வந்ததால் பல பேர் சம்மர் லீவுக்கு சுற்றுலா போகும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பீர்கள். இப்போது உங்களுக்கு இருக்கிற பிரச்சினையே இந்த சம்மருக்கு எங்கே போகலாம் என்பதாகத்தான் இருக...



கோப்புப்படம்

கொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க

மலைகள்,பள்ளத்தாக்குகள், அருவிகள்,காடுகள், நீர்ச்சுனைகள் என அனைத்தும் ஒருசேர அமைந்திருக்கும் இடம் இது.ஆனால்,மழைக்காலங்களிலும் மழைக்கு பிந்திய காலங்களிலும் மிக அழகாக காட்சியளிக்கும்


பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு ‘மற்றது’ அத்தனையும் ஞாபகத்துக்கு வருதுல்ல...இதப்பத்தி எதாவது தெரியுமா..!

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊரும்...விதவிதமான சரக்குகள் எல்லாம் வந்து போகும்! அதைத்தாண்டியும் சில அட்ராக்சன் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.


கோப்புப்படம்

பட்டயாவுக்கு போயிருக்கிங்களா ? அடுத்தமுறை போனால் ‘பிங்பாங் பாங்காக்’கேமை மிஸ் பண்ணிறாதீங்க !

முகத்தில் நிரந்தரமாக படிந்த வெட்கச் சிரிப்பும்,குறுகுறு பார்வை, கொப்பளிக்கும் இளமையோடு வெவ்வேறு உயரங்களில்,தோற்றங்களில் வார்த்தெடுத்த சிலைகள் போல் திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்,பெ...



சிதம்பரம் நடராஜன்

பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் தான்.அதன் ஆதி பெயர் தில்லை.சிதம்பரம் என்பது பிற்காலத்தில் தோன்றிய பெயர்.தில்லை என்பது ஒரு மரம்.அதுதான் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தல விருட...


கோப்புப்படம்

மேகமலை-பெயருக்கேற்ப அது மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஒரு அழகிய மலைப் பிரதேசம்!

‘மலைகளின் ராணி’ என்று ஊட்டியையும் ‘இளவரசி’ என்று கொடைக்கானலையும் சொல்பவர்கள் மேகமலையைப் பார்த்தால் தங்களது எண்ணத்தை நிச்சயம் மறு பரிசீலனை செய்து விட்டுத் தான் மலையை விட்டு கீழே இற...


humansacrifice

மகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி

தன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது


coimbatore

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

சுவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விரும்புபவரா?


jayavilas

நாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா மட்டுமில்ல..மதுரை கீழ ஆவணி மூல வீதியில் வந்து ஜெயவிலாஸ் சாப்பாட்டுக் கடை எங்கேன்னு கேட்டா.சின்னக்குழந்தையும் சொல்லும். புது மண்டப வாசலில் இருக்கும் ப...

2018 TopTamilNews. All rights reserved.