darbar
  • January
    27
    Monday

Main Area

Main



நாளை கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள் !

Deepam
Deepam


பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர். கடந்த 1 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவான மகாதீபம் ஏற்றும் திருவிழா நாளை நடைபெறுகிறது.நாளை 6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

ttn

மகா தீபத்தைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு திரண்ட வண்ணம் உள்ளனர். மக்களின் பாதுகாப்பு கருதி கோவில் மற்றும் கோவிலின் சுற்றுப்புறங்களில் சிசிடிவி கேரமராக்கள் பொருத்தும் பணி  முன்கூட்டியே நடைபெற்றது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கண்காணிக்க ஆயிரக்  கணக்கான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

2018 TopTamilNews. All rights reserved.