• October
    24
    Thursday

Main Area

Main



ஆச்சர்யமான தகவல் தேடி வந்து சேரும் நாள்! யாருக்கு?

Rasipalan
Rasipalan

பஞ்சாங்கம்  ~ *புரட்டாசி ~ *26 ~
{13.10.2019}~  ஞாயிற்றுக்கிழமை

நல்ல நேரம்~ காலை 07.45 மணி முதல் 08.45 மணி வரை & பிற்பகல் 03.15 முதல் மாலை 4.15 வரை
ராகு காலம்~  மாலை 4.30 மணி முதல் 06.00 வரை
எமகண்டம்~ பிற்பகல்  12.00 மணி முதல் 01.30 மணி வரை 
குளிகை~ பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 மணி வரை  
சந்திராஷ்டமம்~ ஹஸ்தம்.

மேஷம் 

காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் - உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம். 

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் 

இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான். 

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் 

ஆரோக்கியத்திற்கும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று, உங்கள் துணைக்கு நீங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணருவீர்கள். 

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் 

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும். 

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் 

சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். குடும்ப பிரச்சினையை தீர்க்க குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நடத்தை முக்கிய பங்காற்றும். காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். 

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி 

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். 

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் 

குழந்தைப்பருவ நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அது தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும். குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டோமே என்ற எண்ணமே உங்கள் கவலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். மகிழ்ச்சியான - சக்திமிக்க - காதல் மன நிலையில் - உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்கள் பார்ட்னர் இல்லாத நேரத்தில், இருப்பை உணர்வீர்கள். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். 

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் 

வேலையிலும் வீட்டிலும் சில அழுத்தங்கள் சட்டென கோபத்தை ஏற்படுத்தும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்கள் துணைவரிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளுமுன் யோசியுங்கள். முடிந்தால் அதைத் தவிர்க்கப் பாருங்கள். அவர் வேறு யாரிடமாவது அதை சொல்லக் கூடும். அன்புக்குரியவருடன் சிறிய விடுமுறைக்கு செல்பவர்கள் அதிக நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார். 

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு 

இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டில் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் புத்திசாலித்தனத்தையும் சமாதானப்படுத்தும் திறமையையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். ரொமாண்டிக்கான மூவ்களுக்கு இன்று பலன் இருக்காது. வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணைக்கு அடிகடி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம். 

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் 

புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக அமையும். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். 

அதிர்ஷ்ட எண்: 1

கும்பம் 

உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்த சீரியசாக முயற்சி செய்யுங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். குடும்ப நிகழ்ச்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய புதையலைப் போன்றவர்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம். 

அதிர்ஷ்ட எண்: 8

மீனம் 

குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். 

அதிர்ஷ்ட எண்: 5

2018 TopTamilNews. All rights reserved.