darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



இன்று குரூப் 4 தேர்வு! 6,491 காலியிடங்களுக்கு 16 லட்சம் பேர் போட்டி..

Exam
Exam

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வினை 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் உள்ள 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வான து நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு

 தேர்வு எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு அறைக்கு வரவேண்டும், ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது, நீலம் மற்றும் கருப்பு நிற பால் பாயிண்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும், தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது, கேள்வித்தாளில் தேர்வர்கள் எதையும் எழுத கூடாது, இங்க் பேனாவால் விடைகளை, "ஷேடிங்" செய்வதோ, பென்சில் உபயோகப்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைகேடான செயல்களில் ஈடுபடுவது, ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.