• August
    21
    Wednesday

Main Area

Mainயாருக்கெல்லாம் இன்று மாலைக்குள் திடீர் திருப்பம் ஏற்படும்!

ராசிபலன்
ராசிபலன்
Loading...

இன்றைய ராசிபலன்
வியாழக்கிழமை (18-7-19)
ராகுகாலம்
பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்
காலை 6 மணி  முதல் 7.30 மணி வரை
நல்லநேரம்
காலை 10.45 மணி  முதல் 11.45 மணி வரை
சந்திராஷ்டமம்
திருவாதிரை மறுநாள் அதிகாலை 1.42 வரை பிறகு புனர்பூசம்
பரிகாரம்
தைலம்

மேஷம் 
உங்களைச் சுற்றிலும் எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்களை அதிக எண்ணிக்கையில் சம்பாதிப்பீர்கள். அதனால், நிச்சயம் உங்களுக்கு பலனுண்டு. நண்பர்களால் தான் உங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்படும். ஆகையால், மகிழ்ச்சியாக இருங்கள். உறவுகளும் பட்டும் படாமலும், தாமரை இலை தண்ணீரைப் போல் இருங்கள்.

ரிஷபம் 
இன்று மாலை வரை உங்களுக்கான நேர்மறை சிந்தனைகளுக்காக காத்திருங்கள். கொஞ்சம் பொறுமை தேவை. அப்படி காத்திருந்தால், நிச்சயம் அது உங்களை அடுத்த தளத்துக்கு கொண்டுச் செல்லும். உங்கள் முன் இருக்கும் கேள்விகளுக்கு இன்றே விடை காண முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆழ்மனதை நீங்கள் அறிந்தால், உங்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

மிதுனம் 
உங்கள் வாழ்வில் அடிக்கடி சில தடுமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். குழப்பம் ஏற்படும் இடத்தில் நீங்கள் நிச்சயம் உங்கள் வருகையை உறுதி செய்வீர்கள். தோல்வியும் கூட சேர்ந்து வரும். உங்களின் ஆளுமையில் சறுக்கல் ஏற்படலாம். ஆனால், அவற்றையெல்லாம் உங்கள் கிரக நிலைகள் சமாளித்துவிடும். கிரகங்கள் உங்களின் ராசிக்கு நன்மைகளைத் தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.

கடகம் 
உண்மைத் தன்மை எப்போதும் உங்கள் தேர்வாக இருக்காது. ஆனால், நிலைமைக்கு ஏற்ப சூழலை கையாள்வதில் தேர்ந்தவரான நீங்கள், தோல்விகளை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவீர்கள். உங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வீர்கள். அதில் சமரசம் செய்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் நீங்கள் ஓர் ஆச்சரியம் தான்.

சிம்மம் 
உங்கள் இலக்கை வேறு வழியில் எப்படி அடைவது என்று யோசியுத்து ஒரு முடிவுக்கு வாருங்கள். ஒரே பாதையில் பயணித்து தோல்வி ஏற்பட்டாலும், மீண்டும் அதே  பாதையில் பயணம் செய்வது புத்திசாலித்தனம் அல்ல. உங்கள் திட்டங்களை நிச்சயம் மாற்றிப் பாருங்கள். சில வேலை எது சரி என நினைக்கிறீர்களோ, அது தவறாக முடியக் கூடும்.  ஒரு ஊருக்கு ஒன்பது வழிகள் இருக்கும். அந்த வழி எங்கு இருக்கிறது என்பதை கண்டறிவதே உங்கள் பணி.

கன்னி 
குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் அதிகம் இருக்கின்றன. பணம் தாராளமாய் புழங்கும். நீங்கள் கோபமாக பேசினாலும், அது உங்களுக்கு சாதகமாகவே முடியும். இன்றைய நாளின் பலன்களை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று  மாலைக்குள் உங்கள் வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்படும்.  

துலாம் 
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும், தொழில் ரீதியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ செல்ல நேரிடும். உங்களை தக்க வைக்க கடுமையாக போராடுவீர்கள். அதில், ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். ஆனால், முயற்சியை மட்டும் நிறுத்தாதீர்கள்.

விருச்சிகம்
நண்பர்களிடமிருந்து ஆதரவான வார்த்தைகள் கிடைக்கும். அவை உங்களுக்கு உற்சாகமாக அமையும். பல சமயங்களில், எதை எப்படி செய்வது என்று தெரியாது முழித்துக் கொண்டிருப்பீர்கள். வீட்டு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு, அதன் படி நடந்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வீட்டு பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்து வாருங்கள். உங்கள் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் இருக்கும்.

தனுசு 
எப்போதும் மகிழ்ச்சியாகவே  இருப்பது எப்படி என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் நீங்கள். ஆனால், இந்த இளைப்பாறுதல் எல்லாம் மீண்டும் ஓடுவதற்காகத் தான் என்பதை மறந்து விடாதீர்கள். இனி வரும் காலங்களில் மிக சோம்பேறியான நிமிடங்களையும், டென்ஷனான நொடிகளையும் அனுபவிக்கப் போகிறீர்கள். 


மகரம்
கிரக நிலைகள் இப்போது உங்களுக்கு எதிராகவே உள்ளன. ஒவ்வொருவரும் உங்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்து அதை உங்களிடமே தெரிவிப்பார்கள்.  உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை உதிர்த்து உங்களை உற்சாகப்படுத்த ஒருவரும் இருக்க மாட்டார்கள். சற்று எரிச்சலான நாள் என்றே சொல்லலாம். இந்த நாளை மிக எச்சரிக்கையாக கடந்து செல்லுங்கள். 

கும்பம் 
பழங்காலக் கதைகளை சொல்லி யாராவது உங்களிடம் வந்தால், 10 கி.மீ தள்ளிச் செல்லுங்கள். ஏனெனில், அதையெல்லாம் கேட்க இப்போது உங்களுக்கு நேரமில்லை. இலக்கை குறி வைத்து பயணியுங்கள். உடன்பிறந்தவர்களினால் உங்களுக்கு பலன்கள் குறைவு தான். குழப்பமான மனநிலைக்கு அடிக்கடி தள்ளப்படுவீர்கள். தெளிந்த மனநிலையில் இருக்கும் போது, மீண்டும் குழப்பமடைய செய்வதற்காகவே யாராவது உங்களிடம் வருவார்கள். 

மீனம்
முடிவுகள் இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத பயன்கள் சில உங்களை வந்துச் சேரும். இருப்பினும், ஆர்ப்பாட்டத்தை விடுத்து, அமைதியையே கடைபிடியுங்கள். நீண்ட காலமாக நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள்

2018 TopTamilNews. All rights reserved.