• February
    25
    Tuesday

Main Area

Main



‘வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது’ - பெரியார் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி பகிரங்க மன்னிப்பு

periyar
periyar

சென்னை: தந்தை பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டது தவறு என டிஎன்பிஎஸ்சி மன்னிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதியோடு குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள், மற்றும் பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “தந்தை பெரியாரின் பெயரை சாதியோடு குறிப்பிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த தவறை செய்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மன்னிப்பு கோர வேண்டும்” என அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நிபுணர்கள் குழுதான் குரூப்-2 வினாத் தாளை தயார் செய்து சீலிட்டு அனுப்பியதாகவும், குரூப்-2 தேர்வு வினாத்தாள் பிரச்னை குறித்து தேர்வர்கள் நவம்பர் 13 முதல் முறையிடலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், வினாத்தாள் பிரச்னை பற்றி நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.