• August
    26
    Monday

Main Area

Main



அதுக்குதான் அம்மா மிக்சி கொடுத்தாங்க- அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar
jayakumar
Loading...

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முற்பட்டது.  அதற்கு எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதால், உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி திமுக உறுப்பினர்களும், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, ‘ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும்’ எனக் கூறினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘ ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை’ எனக் கூறினார். 

இதையடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  ‘என்றைக்குமே மம்மி ஆட்சி தான், இப்படியெல்லாம் எதிர்க்கட்சியினர் நக்கல் அடிப்பார்கள் என தெரிந்துதான் அன்றைக்கே மக்களுக்கு ஜெயலலிதா மிக்ஸி கொடுத்தார் என்று நக்கலாக பதிலளித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.