darbar
  • January
    20
    Monday

Main Area

Main



மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்! அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு 

TN Assembly
TN Assembly

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நெருக்கடியாலும், நீதி மன்ற உத்தரவாலும் உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு நடத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் முக்கியமான பகுதிகளில் மேயர் பதவிகளைக் கேட்டு வருகின்றன. இது, திமுக மற்றும் அதிமுக தலைமையிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மேயர் பதவிக்கு மட்டும் மறைமுக தேர்தல் நடத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

TN assembly

இந்நிலையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.